பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 21



வளப்பம் கொண்டது தண்ணீர் நீராடினார். குளுமையாக இருந்தது உடம்புக்கு. அது போலவே, அவரது முகமும் காந்தி பெற்று விளங்கிற்று. சுருட்டைத் தலைமுடியை முன் விரல்களால் கோதி 'வாகு' எடுத்து விட்டவாறு கூடத்திற்கு வந்தார் அவர். பாய் விரித்து, பலகாரம் வைக்கப்பட்டிருந்தது. புது மாப்பிள்ளைக்கு உபசாரம் செய்கிறாற்போல அங்கு - அப்பொழுது காரியங்கள் நடைபெற்றன. அவர் நெஞ்சு நிமிர்த்தி, நினைவு நிமிர்ந்து பார்த்த தருணத்தில், அந்தப் பெண் நாணமும் நகையுமாகக் காட்சி தந்தாள். ‘பெரியவர் கோதண்டபாணியின் மகள் வாணி. நம்மால் இந்தப் பெண்ணுக்கு வீண் சிரமம். தொண்டுதான் மனித மனங்களிலே அன்பையும் பாசத்தையும் வளரச் செய்கின்றது.’

"இட்லி ஆறிடப் போகுது. அம்மா சாப்பிடச் சொன்னாங்க."

"ஆமாம், ஞானசீலன்! சாப்பிடுங்கள். எனக்கும் பசிதாளலே," என்று பேச்சைத் துண்டித்தார் கோதண்ட பாணி. இட்லித் துண்டங்களைத் தூண்டில் போட்டார்.

"ஆகட்டும். இதோ, சாப்பிடுகிறேன். இட்லி சாப்பிடுவதற்கு அம்மாதான் நினைவூட்ட வேண்டுமென்பதில்லை. நீங்களே ஞாபகப்படுத்தினால் கூட, நான் அதன் பிரகாரம் நடக்க வேண்டியவன்தானே?"

ஞானசீலன் பொடி போடாமலே, 'பொடி' வைத்து எழுதப் பழகியவர் என்பது ஜகப்பிரசித்தம். அதே போல, பேசும் பாங்கும் கைவரப் பெற்றவர் - அதாவது, பேசும் வக்கணை வாய்வரப் பெற்றவர்! சாப்பிட்டுப் பேசியவளின் திசை பார்த்துப் பேசினார் சிந்தனையாளர்.

வாணியின் அழகுக் கவர்ச்சியில் பங்கு போடும் உரிமை பூண்டவற்றில் ஆணி முத்துப் பற்களுக்குத்தான்