பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

22 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


கூடுதலான சொந்தம் - பாத்தியதை. அவை இப்போது முன்னைக் காட்டிலும் ஒளிமிகுந்து திகழ்ந்தன. இதழ்களின் எழில் திரட்சி விழிகளின் கரையில் ஒதுங்கியது. சரிந்து விழுந்த தாவணியை ஒதுக்கி விட்டபடி, ஒதுங்கி நின்றாள். இட்லிகளைத் தாங்கிய எவர்சில்வர் தட்டு காலியானது.

இட்லிகளைத் தாங்கிய சாண்வயிறு நிரம்பியது.

“தம்பிக்கு இது. ஐயாவுக்கு இது!” என்று பிரிவினைபடுத்திக் காட்டியபடி இரண்டு கோப்பைகள் நிறையக் காப்பி கொணர்ந்தாள் முதியவள்.

ஞானசீலனுக்கு ஏப்பம் பறிந்தது.

“தம்பி, உனக்கு எங்கையினாலே இப்படிக் காப்பி தருவேன்னு நேத்து ராத்திரி நான் நினைக்கவே யில்லையப்பா,” என்றாள் கோசலை. பின்னர் மீண்டும் தொடர்ந்தாள்: “ஐயா இருக்கிறப்பவே சொல்லிப்பிடுறேன். அவங்களுக்கும் அத்துபடியான சேதிதான் இது. தம்பி, நான் இன்னம் ரொம்ப நாளைக்கு இந்த மண்ணுக்குப் பாரமா இருக்கப் போறதில்லே. என்னோட ஆவி நிம்மதியாப் பிரிய வேணும்னு உனக்குத் துளியத்தனை யாச்சும் கவலை இருந்தாக்க, நான் உசிரோட இருக்கிறப்பவே, உன்னை மாலையும் கழுத்துமாப் பாக்கிற பாக்கியத்தை எனக்குத் தந்துப்பிடு, போன வருஷம் எனக்கு உடம்புக்கு வந்திச்சு உயிர் தப்பிச்சுது; ஆனால், இப்ப அப்படி இல்லே, இருக்கவும் வாய்க்காது. எம் மனசிலே இருந்த பேருங்களை யெல்லாம் போன வருஷமே உனக்கு நான் சொல்லிப்பிட்டேன். இந்தப் பன்னிரண்டு மாசத்துக்குள்ளே புதுசா ஒரு பேரையும் உன் கவனத்துக்குக் கொண்டு வர வேணும்,” என்று நறுக்குத் தறித்த மாதிரி பேச்சைத் தொடங்கி நிறுத்திய கோசலை