பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 23



அம்மாள், ஓர் அரைக் கணப் பொழுது கழிந்ததும், "அம்மாடி வாணி!" என்று கூப்பிட்டாள். வாணியின் முகம் கண்டதும், "ஒரு லோட்டா தண்ணீர் வேணும். சுடுதண்ணி, தம்பி, ஒனக்குப் பச்சைத் தண்ணி கொண்டாரச் சொல்லட்டுமா?". வாணிதான் நன்னாரி வேர் போட்டு பதப்படுத்தி வைச்சிருக்குது;” என்று நாசூக்காகப் பேச்சை எங்கெல்லாமோ கொண்டு சென்றாள் தாயார்.

தண்ணீர் வந்தது.

ஒரு மடக்கு தீர்ந்தது.

பஸ் ஸ்டாண்டு - மானாங்கோரை டவுன் பஸ் காதைத் துளைத்துக் கொண்டு சென்றது.

"அந்த ஒரு பெயரைச் சொல்லிப்பிடட்டுமா ?"

"ஊம்!"

"வாணிங்கிற இந்தப் பேர்தான் புதுசு. என்னமோ தம்பி உன்னை மாலையும் கழுத்துமாப் பார்க்கறதுக்குக் கொடுத்து வச்சவளாக ஆக்கிப்பிடு, போதும்," என்று மீண்டும் ஒரு முறை நினைவூட்டினாள் அவள். வாழ்வின் கதையை முடித்துக் கொள்ளப் போகிறோமே என்கிற வேதனையின் நச்சரிப்பு நச்சரவமாகக் கொத்திக் கொண்டிருந்தது.

நிலைப்படி மறைவில் நின்ற வாணி ஓரக்கண்ணால் கூடத்துக்குத் தன் கள்ள விழிப் பார்வையைத் திசை திருப்பின மாதிரி, ஞானசீலனுடைய நேர்முகப் பார்வையும் அந்த அழகுப் பதுமையைச் சுற்றி வளைத்துக் கொண்டு ஒரு வெள்ளைக் கோடு கிழித்தது. சம்பூர்ண ராமாயணத்திலே வருகிற இலட்சுமணன் கோடல்லவே அது?...

ஞானசீலனின் விழிகள் மயங்கின. வாணியின் கண்கள் அவ்வாறு மயங்க வைத்தன என்பது எண்பது