பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ◆ 25



தாயும் தனயனும் சேர்ந்து கூட்டு மொத்தமாகச் சிரித்தார்கள். அவுட்டுச் சிரிப்பு!

"ரொம்பக் கெட்டிகாரப் பொண்ணுதான் இந்த வாணி, இல்லையா, அம்மா ?"

"அது கெட்டிக்காரப் பொண்ணாய் இருக்கக் கொண்டுதானே எம் மனசையும் கெட்டியாப் பிடிச்சுகிட்டு, இப்ப, உன்னோட எஃகு மனசையும் கைப்பத்திறதுக்கு பிளான் கட்டியிருக்குது!...ஏம்மா வாணி, நான் சொல்றது. நிஜம்தானே?."

ஆனால், அங்கு-அப்பொழுது அந்த வாணி நின்றால்தானே?

வினாடிக்கு எப்போதுமே ஆயுள் கம்மி.

மருந்துக் குப்பியுடன் வந்தாள் வாணி.

கோசலை அம்மாளுக்கு வயிற்றைக் குமட்டிக் கொண்டு வந்தது. படுக்கையில் தஞ்சம் அடைந்தாள்.

நிச்சலனமான உள்ளத்துடன் தனியறையில் நுழைந்த ஞானசீலனிடம் ஒட்டப்பட்டிருந்த ஓர் உறையை நீட்டிச் சென்றாள் வாணி. உறைப் பரப்பில் எந்த விலாசமும் இல்லை!

4. "என் பெயர் தவசீலி!"

யதுகள்தாம் மனிதனின் உயிருக்கு எல்லைக் காவல் புரிகின்றன.

அனுபவங்கள்தாம் மனிதனின் உள்ளத்துக்குப் பாதுகாவல் புரிகின்றன.

இந்தச் சிந்தனை ஞானசீலனின் இலக்கியக் கற்பனை நெஞ்சத்தினின்றும் புறப்பட்ட போழ்தில்,