பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

44 ❖ பூவை. எஸ். ஆறுமுகம்


அவரால் என்ன செய்ய முடியும்.?

காதல் எனும் நோய் உடனடியாகத் தீர்ந்து போகக் கூடியதல்லவே?

மீண்டும் நெருப்புப் புகைந்தது.

அதாவது, அடுத்த சிகரெட் தீர்ந்தது என்று அர்த்தம்.

‘வாணியின் கேள்விக்கு அர்த்தம் புரிந்து விட்டது எனக்கு. அது போல, என்னுடைய வினாவுக்கும் அவளுக்குப் பொருள் புரிந்திருக்கத்தானே வேண்டும்?’

நினைவுகளுக்குச் சுகந்தம் உண்டு; சுகம் விரவிய சுகானுபவ உணர்வும் மிச்சம்.

ஞானசீலனின் மனம் என்னவோ செய்தது. எதையோ ஒன்றை இழக்கக் கூடாது என்கிற தவிப்பு மேலோங்கி ஆதங்க வடிவு கொண்டது. அழகின் வடிவு கொண்ட தனக்குப் பழக்கம் ஏற்பட்ட அழகிகளின் வரி வடிவங்களை-நினைத்து நினைத்துப் பார்த்தார்.

மூடிய கண்கள்.

மூடிடாத சிந்தனை ல்யம்.

ஆடிய அழகு.

ஆடாத மயக்க நிலை.

கிழக்கே நோக்கினார்.

அங்கே வாணி நின்றாள்!

வடக்குப் பக்கம் சாய்ந்தார்.

அங்கும் வாணிதான்!

விண் முட்டினார்.

அவ்விடத்திலும் விண்முட்டி நின்றாள் வாணி.

மண்ணுக்குத் தாழ்ந்தார்.

மார்பகச் சேலை மண் மாதாவை ஆரத்தழுவிட, மாண்புற்ற எழில் மயக்கம் இனிய சொப்புத் திளைப்பில்