பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன

❖51


9. காதலுக்கும் கனவு உண்டு!

தொடர்ந்த இனிய நல் நினைவுகளைத் தொடர்ந்த அந்தக் குரல் அப்பொழுது ஞானசீலனின் நெஞ்சைக் கசக்கிப் பிழிந்தது. வாணியின் சிந்தனை ஒன்றிலேயே சித்தத்தைப் பதித்துக் கொண்டிருந்த அவருக்குத் தவசீலியின் முகங்கூட வாணியையே நினைவூட்டிற்று. மனமும் உடும்பும் இவ்வகையில் ஒன்றுதான்; பற்றுக் கொண்டு பற்றி நின்றால் இந்த இரண்டு இனமுமே ஒன்றுதான். ஒரு ரகம்தான்!

தவசீலியை வாணியின் நோக்கம் கொண்டு நோக்கியவாறு இருந்த ஞானசீலன், அதே தவசீலியைத் தவசீலியாகவே எண்ணி, மனம் தடுமாறி, பின், மனம் நிலைக்கச் செய்த பாவனை கொண்டு மருள் விலக்கி, அருள் சேர்த்து அடுத்த கணம் பார்த்த நேரத்தில், கண்ணீரும் கம்பலையுமாக நின்ற அபலைப் பெண் தவசீலியை அவரால் நன்கு காண முடிந்தது.

காலில் சிதறிய கண்ணீர்த் துளிகள் அவரது மனத்திடை ரத்தத் துளிகளைச் சிதறச் செய்தன.

ஸார்! ஸார்!

“எழுந்திருங்கள், தவசீலி!”

அரை மணி சாவகாசத்தில், தவசீலியும் அவள் தந்தையும் தம்புச் செட்டித் தெருவை அடையச் செய்தார் ஞானசீலன். அடுத்த அரைமணிப் பொழுது, பெரியவரை ஜெனரல் ஆஸ்பத்திரியில் சேர்ப்பதில் கழிந்தது.

கழிந்த நினைவுகளுக்குக் காலமும் பொழுதும் உண்டா, என்ன?

நேற்றைய நினைவுகள் பனி மூட்டம் கண்ட பூக்கள் போல.