பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56❖பூவை. எஸ். ஆறுமுகம்


 ஏறெடுத்துப் பார்க்கக்கூட அருள் பாலிக்கவில்லை. "இப்போது பார்ப்பதற்கு ஒய்வில்லை!" என்ற விடை வந்தது. ஒரு கணம் அவருக்கு மூளை குழம்பியது. பிறகு, குழம்பிய மூளையில் விடிவு பிறந்தது.

"உம்மைப் போன்ற தலைவர்களை நம்பி நான் என் எதிர் காலத்தையும் இளமைப் பிராயத்தையும் வீனாக்கிக் கொள்ள இருந்தேன். நல்லவேளை, உங்கள் மனை எனக்கு ஒரு போதிமரமாக இருந்து, எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்து விட்டது. வாழ்க நீர்! வாழ்க உமது வேஷம்!” என்று குறிப்பு எழுதி அங்கேயே ஜன்னல் வழியே போட்டுவிட்டு, நடையைக் கட்டினார். அம்பலவாணன் சந்நிதியை அண்டி ஒண்டினார். கேட்டதெல்லாம் தருபவன் அவன் தந்தான். சென்னையிலேயே அலுவல் கிடைத்தது. இலக்கியப் பற்று அவரை வளர்த்தது. கட்சி அரசியலைப் படிப்பதுடன் சரி, பற்றுக் கொள்வதில்லை. ஒருமுறை குட்டுப் பட்டது போதாதா?.

பல்வேறு தினுசான அரசியல் தலைவர்களின் பெரிதுபடுத்தப்பட்ட படங்களைக் கண்டு, காலத்தை வழி விசாரித்துப் பேசி முடிந்த பிறகு, ஞானசீலன் நெடுமூச்சு விட்டார். நல்ல வேளையாக, அதே நேரத்தில், 'தமிழரசி' யின் உரிமைக்காரரான மணிமுத்து வேலாயுதத்தின் கார் மட்டும் வரவில்லை. மணிமுத்து வேலாயுதம் அவர்களும், வந்தார். அவர்களுடன் கூட, ஈவினிங் இன் பாரீஸ் வாசனைத் திரவியத்தின் நெடியும் நெடிதுயர்ந்து வந்தது.

மூச்சுத் திணறல்,

வணக்கம் செலுத்தப்பட்டது.

"வாருங்கள், மாடிக்கு விருந்து சாப்பிட்டுவிட்டுப் பேசுவோம்," என்று மாடிக்கு அழைத்துச் சென்றார்.