பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன❖55


விடுதியில் கட்டுத்திட்டப் பிரகாரம் இரவு மணி ஏழே முக்காலுக்குக் கச்சிதமாக வெளி வாசலைத் தாழிட்டு விடுவார்கள். ஆனால், கட்சியின்பால் கனிந்த வெறி, அவரை ஆட்டிப் படைக்கவே, ஆட்டிப் படைத்திட்ட தலைவரின் பேச்சைக் கேட்க, டவுன் ஹாலுக்குச் சென்றார். அவருக்கு 'ஜமா' சேர, டவுனில் தங்கியிருந்த தோழர்கள் உதவினார்கள். பேச்சு முடிந்து, நடந்து வரும்போதுதான் அவருக்குத் தன் படிப்பு, ஹாஸ்டல் வாழ்வு, அதன் பயங்கரமான சட்ட திட்டம், ஹாஸ்டல் வார்டன் எர்ரட்டின் கெடுபிடி போன்ற விவரங்கள் அவருடைய மூளையை ஆக்கிரமித்துக் கொண்டன. கட்சியைக் காட்டிலும் பெருமதிப்புக் கொண்ட படிப்பின் மதிப்பு அப்பொழுதுதான் அவருக்குப் புலனாயிற்று. என்ன பயன் ? ஹாஸ்டல் வார்டன் அவருக்கு முன்னதாகவே அவருடைய சட்டத்தைத் தீர்ப்பாக்கி குறிப்பு எழுதி வைத்துவிட்டு, அந்தக் கையோடு, அவரைச் சீட்டுக் கிழித்து, வெளியே அனுப்பி விட்டார். ஆகவே, ஞானசீலனுக்கு இன்னும் அதிகமாகக் கட்சிப் பைத்தியம் பீடிக்கத் தலைப்பட்டது. முடிவு என்ன தெரியுமா?

ஒரு முறை பரீட்சையில் தோற்று, பிறகு பட்டம் வாங்கியபின், அவர் பூசனை செய்த தலைவர் ஒருவரைக் காணத் தஞ்சையிலிருந்து சென்னைக்கு விரைந்தார். தலைவரின் பேட்டிக்காக அவர் வீட்டிலேயே காத்திருந்தார். அவர் சிபாரிசின் பேரில் சென்னையில் ஏதாவது பத்திரிகையில் அலுவல் பார்க்கலாம் என்பதே ஞானசீலனின் சபலம். சபலம் கடைசியில் சபலமாகவே, ஆய்விட்டது. நடந்தது இதுதான்; மன்னவர் சமுதாயத்தின் பொறுப்பு, கடமை ஆகியவைகளைப் பற்றி சாங்கோ பாங்கமாகவும், திட்டவட்டமாகவும் பாடம் ஒப்புவித்துப் பழகிய மேற்படி தலைவர், அவரது பக்தகோடிகளில் ஒருவரான ஞானசீலனைக் கடைக்கண் கொண்டு