பக்கம்:திருமணங்கள் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திருமணங்கள் செர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகின்றன ✽ 83




உண்டானால் கூட, அவர்கள் எல்லோருமே வரலாற்று மகிமை பூண்டொழுகி விட முடியாது.

காலத்தின் நியதி புதிர் மயமானது; அதே கதியில் மாயை நிரம்பியது.

பிறப்பால் பெருமை பெறாத எத்தனையோ பிறப்புக்கள், வாழ்வால் பெருமை பெற்றிருக்கின்றன.

வெறும் மனிதர்களாகத் தோன்றியவர்கள், மனிதாபிமானம் கிட்டிய மனிதர்களாக உலக அரங்கில் ஒருசிலர் நடமாடியிருக்கிறார்கள்.

இவ்வாறாகச் சரித்திர பூர்வமான சிருஷ்டியாக வரலாற்றேடுகள் தம்மை வருணிக்க வேண்டுமென்னும் ஆதங்க வெறியுணர்வுடன் வாழ்க்கை என்கிற சோதனைக் களத்தில் லட்சியச் சித்துக்கள் விளையாடி, அவ்விளை யாட்டில் கெலிக்க அஷ்டாவதானம் செய்து போராடி வாழ்ந்து காட்டிய பெரியார்களின் கதைகள் ஒன்றா, இரண்டா?

இப்படிப்பட்ட சரித்திர புருஷர்களின் கதைகளை நாலு பேர் முன்னிலையில் சொல்ல வேண்டுமென்று ஞானசீலன் வெகு காலமாகவே ஆசைப்பட்டது உண்டு. அவ்வாசை இப்பொழுது நிறைவேறிற்று. திருச்சி அர்ச் சூசையப்பர் கல்லூரியின் மாணவர் அவை அவருக்கு ஒர் அழைப்பு அனுப்பியது. பழைய மாணவர் என்ற ஹோதா, வளர்ந்துவிட்ட எழுத்தாளர் என்ற மரியாதை, தாய்நாட்டு மண் எனும் பாசம். அழைப்பை ஏற்றார். அவர் எழுத்துக் களை விரும்பும் மாணவ மாணவிகள் ஏகப்பட்ட பேர்களின் பாசமும் சேர்த்தி. முக மலர்ச்சியுடன் ஒப்புக் கொண்டார். உழைத்துக் குறிப்புக்கள் சேகரம் செய்வதில் சில நாட்களும், சேகரித்த குறிப்புக்களை மனத்தில் ஊறப்போட்டுச் சிந்திப்பதில் சில நாட்களும் ரம்மியமான