பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 வேலே படியளக்கவில்லை. ஆகவே, அவன் திக்குமுக் காடிப் போனன். கிடைத்து வந்த வரும்படி வாய்க்கும் கைக்குமே பற்றும் பற்ருததாக இருந்தது. இப்படியிருக்கும் பொழுதுதான் ஒரு நாள். அடம் பிடிக்கும் பணக்காரக் குழந்தையைப் போல் மழை நின்று நின்று பெய்தது. பின்னங்கால்கள் இரண்டும் கட்டப்பட்டு வாசலில் நின்ற கழுதையைப் பிடித்து வந்து வாசல் தாழ்வாரத்தில் கட்டுவதற்குள் வியாதிக் காரியான ராக்காயிக்கு மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கி, யது. மழையில் வேறு நனேந்துவிட்டாள். அதைச் சாக்காகக் கொண்டு குளிர்க் காய்ச்சல் வந்துவிட்டது அவளுக்கு. வெளுப்பதற்கு வந்திருந்த புடவைகள் அத் தனேயையும் அவள்மேல் போர்த்தியுங்கூட, அவள் உடம்பு நடுங்கிக்கொண்டே யிருந்தது. இக்காட்சியைக் கண்டதும், கறுப்பன் பதறித் துடித்தான். ஒடிப் போய் உண்டியற் கலயத்தைக் கையில் எடுத்துச் சில்லறைக் காசுகளேச் சேர்த்தான். அரை ரூபாய் சேர்ந்திருந்தது. எடுத்து முடிந்துகொண்டு, நாட்டு வைத்தியர் வீட்டுக்கு ஒட்டமாக ஒடிஞன். வந்த வைத்தியர் நாடிப் பரிசோதனை செய்தார். இது கபவாத ஜூரம். செட்டித் தெருவிலே இருக்கும். புது டாக்டர் ஐயாவைக் கூட்டியாந்து பாரு, கறுப்பா! ஆளுல் அவர் ரொம்பக் கருர் ஆசாமியாம். பத்து அஞ்சு பணத்தைக் கொடுத்துக் கையோடு அழைத்து வந்து காட்டு. மூன்று நாலு ஊசி ஏற்றில்ை எல்லாம் வசத் துக்கு வந்துவிடும்!” என்ருர் நாட்டு வைத்தியர். மண்ணுல் செய்யப்பட்ட ஐயனர் போல் கறுப்பன் மருண்டு போய் நின்றுவிட்டான். ராக்காயிக்குச் சிக்கு