பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

151 ராக்காயியின் உயிரையும் தன் உள்ளத்தையும் அடைத்து வைத்திருந்த அந்தத் தாலியையே இமை மூடாமல் பார்த்தவாறு இருந்த கறுப்பனுக்கு ஏதேதோ பயங்கரமான எண்ணங்கள் படமெடுக்கும் பாம்புகளாக உருமாறிச் சீறத் தொடங்கின. 'அய்ய...ஆத்தா...சாமி!' உயிர்ப் பாகத்தில் இவ்வார்த்தைகள் எதிரொலித் தன். ஒருகணம் சிந்தித்தான்; அவன் கைகள் கூம்பின; கண்ணிரை வழித்தெறிந்துவிட்டு, கைக்குள் அடங்கி ஆயிருந்த தாவியுடன் டாக்டரை நாடிப் பறந்தான். செட்டித் தெருவில் கும்மிருட்டு அப்பிக் கிடந்தது. கீழத் தெருவிலிருந்து ஊளையிட்ட நாயின் அவல ஒலம் அவனை அச்சுறுத்தியது. கைக்கழியைக் கீழே போட்டுவிட்டு, "'டாக்டர் ஐயா!' என்று குரல் கொடுத்தான். து.ாக்கம் கலைக்கப்பட்ட டாக்டருடன், தூண்டிவிடப் பட்ட கோபமும் வந்தது. - மென்று விழுங்கிக்கொண்டே விஷயத்தை வெளி யிட்ட ஏழை, அவர் வாய் திறந்து பணத்தைப்பற்றிக் கேட்பதற்கு முன்பாகவே தான் கொணர்ந்த தாலியை அவர் காலடியில் வைத்து விம்மியவாறே, இதை நம்பிக் கைக்கு வைச்சுக்கிடுங்க, எசமான் அடுத்த கிழமை பீ.சுப் பணம் பூராத்தையும் கட்டிப்பிட்டு, இதை மீட்டுக்கிட்டுப் போகிறேன். இது என்னுடைய சம்சாரத்தினுடையது. அந்தப் பொம்பளேக்குத்தான் இப்ப சீக்கு அதிகமா யிருக்கு. நீங்கதான் எனக்குத் தெய்வம் கணக்கிலே! அட்டி சொல்லாமல் வந்து பாருங்க!' என்ருன். டாக்டர் நாகசுந்தரத்தின் வீட்டுப் பெட்டியில் அந்தத் தாலி அடங்கியது. - - - சரி, வண்டி கொண்டு வரலையா?”