பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1ඨිද් இல்லீங்க!” "இப்போ காட்டிலேயும் மேட்டிலேயும் அந்தக் கும்மிருட்டிலே எப்படி நான் நடந்து வர்றது?’ என்று கேட்டார் டாக்டர். இருங்க, இந்தா கொண்டு வாரேன் என்று. திரும்பிய கறுப்பன் மொட்டை வண்டியுடன் வந்து டாக்டரை ஏற்றிச் சென்ருன். 13 * மூன்று நாட்கள்: ராக்காயிக்குச் சுயநினைவு திரும்ப வில்லை. ஊசி மருந்துக் கலவைகள் உடலுக்குள் முடங்கின. ஆனல் நான்காவது நாள் டாக்டரை அழைத்து வர இரவல் மாட்டு வண்டியைத் தேடிச் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. இறு முகத்தில் இருந்தான் செஞ்சுடர்ச் செல்வன். இரட்டைவடச் சங்கிலி அறிமுகப்படுத்திக் கொண் டிருந்த தங்கத்தாவி கறுப்பனின் உள்ளங்கையில் நெல்லிக் கனியாகக் காட்சியளித்தது. அதிகமானுக்குக் கிடைத்த நெல்லிக்கனி ஒளவைப் பிராட்டிக்கு உதவ முனைந்தாற். போல, ஒருவேளை, இந்தத் தாலி இவனுக்குக் கை கொடுக்கப் போகிறதோ...? அவரைக் கறுப்பன் பார்த்தது இல்லையே?...சொக்கப்பனல்லவா. அவரிட மிருந்து அழுக்கு எடுத்து வந்தான்...? . மூன்று மாதங்களுக்கு முந்தைய நிகழ்ச்சிக்குள் ஞாபகத்தைப் பதித்துவிட்டான் அவன். ராக்காயியின் நினைப்புக்கு அவள் தாலியாச்சும் இந்தக் குடிசையிலே இருந்தால் மனசுக்கு எம்பிட்டோ ஆறுதலாயிருக்குமே...! அதற்குக்கூட வழி வைக்காமல், அந்த ஈவில்லாத டாக்டர் மாற்றலாகிப் போகும்பொழுது. சொல்லாமல் கொள்ளாமல் தன்னேடேயே ராக்காயியின் தாலியையும்.