பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

153 எடுத்துக்கிட்டுப் போய்விட்டாரே...!" என்ற எண் ணங்கள் தலையெடுத்தன. அவன் பற்களைக் கடித்துக் கொண்டான். இப்போது கறுப்பனின் மனத்தில் புதிதாக ஒர் ஆலோசனை பளிச்சிட்டது. அந்த ஆலோசனையின் பிற்புலத்திலே பொன்னம்மாவும் சொக்கப்பனும் ஆல வட்டம் சுற்றினர். இந்தத் தாலியையும் சங்கிவி யையும் ஒளிச்சு வச்சு, புதுக்கோட்டைப் பக்கம் நாடிப் போய் விற்றுப் பணமாக்கினால், எப்படியும் நூறு, இரு நூறு ரூபாய் தேறும். காதும் காதும் வைச்சாப்பிலே, பொன்னம்மாவுக்கும் சொக்கப்பனுக்கும் கண்ணுலம் கட்டிப்பிட வேண்டியதுதான்!...டாக்டர் எனக்கு உண் டாக்கின நஷ்டத்துக்கு ஈடு கட்டத்தான் சாமி இந்தத் தங்க நகையை என் கண் முன்னுல் காட்டியிருக்குது போல..ஆமாம், அப்படித்தான் இருக்கும்!” என்று முடிவு செய்தான் அவன். - சி. ஜேந்திரபுரத்துப் பாலத்தடியிலிருந்து திரும்பிய கறுப்பன், உலர்ந்த துணி மூட்டையை இறக்கிக் கீழே தள்ளிவிட்டதுதான் தாமதம்; கழுதை பிடித்தது. ஒட்டம். சொக்கப்பன் ஓடி வந்து மூட்டையைக் குடிசைக்குள் தூக்கிச் சென்ருன். - அப்பா! வாங்க முதல்லே சோறு சாப்பிடலாம். அப்பாலே மற்ற வேலையைப் பாருங்க!' என்ருன் மகன். 'நீ ஆக்கினியா......?’ இல்லே, வந்து...நம்ப பொன்னம்மா சமைச்சுத் தந்துச்சு!...” . . . . . அப்படியா?...இரு மூஞ்சியைக் களுவிக்கிட்டு வாரேன்!” . . . . . தி,-10