பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

160 கூடத்து ஊஞ்சலுக்கு வந்து அமர்ந்துகொண்டு அக் கடிதத்தை ரொம்பவும் அசிரத்தையாகப் பிரித்துப் படித்தாள். இப்படிப்பட்ட அதிசயம் தனக்கெனக் காத்திருக்குமென்று சுலோசணு எவ்விதம் முன் கூட்டியே அறிந்திருக்க முடியும்...? பூவை மணி காரியாலயம். 'அன்புடையீர், பூவைமணி’ நாவல் போட்டியில் தங் களுடைய வசந்த பைரவி என்ற நாவலுக்கே முதற் பரிசு கொடுக்கத் தீர்ப்புக் குழுவினர் ஏக மனதாகத் தீர்மானித்திருக்கிருர்கள். பரிசுத் தொகை ரூபாய் ஆயிரம் அடுத்த வாரம் தங் களுக்கு வந்து சேரும். இப்படிக்கு, ஆசிரியர்.” நல்ல சேதியைத் துாது சொல்லி வந்த கடிதத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாள் சுலோசன. அவளுக்குக் கண்ணிர் வெள்ளம் மடை திறந்தாற்போலப் புரண்டு வந்தது. அவள் கதைகள் வெளியாகியிருந்ததற்கு அன்புப் பிரதியாகப் பத்திரிகை ஆபீஸிலிருந்து வந்திருந்த அந்த இரண்டு பத்திரிகைகளை உடைத்துப் பார்க்கக்கூட அவளுக்கு உணர்வு பிறக்கவில்லை; ஆசையும் உண்டாக வில்லை. அவளுக்கு அப்பொழுது அக் கடிதம்தான் எல்லாமாக இருந்தது. அந்தக் கடிதத்தின் வாசகத்தை மீறியடித்துக்கொண்டு அவள் மனக் கண்முன் ஒர். உருவம் தோன்றியது. அந்த உருவம் அவள் கண்களில் கண்ணிரை வரவழைத்தது. விரிந்து கிடந்த கடிதம்