பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுருதி சேர்ந்தது! 'தபால்" என்ற குரல் கேட்டதுதான் தாமதம்; ஊஞ்சலில் தன்னே மறந்த சிந்தனையில் லயித்திருந்த சுலோசன வாரிச் சுருட்டிக்கொண்டு எழுந்து வெளியே ஓடிவந்தாள். மேஜைமீதிருந்த டைம்பீஸ், மணி பத்து என்பதைச் சொன்னதிலிருந்து அவள் நிமிஷத்துக்கு நிமிஷம் தபால்காரனின் வருகையைத்தான் ஆசையுடன் எதிர்பார்த்திருந்தாள். அப்படிப்பட்ட சமயத்திலென்று அவளுக்கு வழக்கமாக மனசைத் துளைத்தெடுக்கும் கடந்த நிகழ்ச்சிகள் தோன்றின. அவள் பிடித்து வைத்த பொம்மையாக உட்கார்ந்துவிட்டாள். அவள் நிலை அப்படி என்ன செய்வாள்...? 'அம்மா, இந்தாருங்கள் தபால்’ என்று திரும்பவும் நினைவூட்ட அலட்டியபோதுதான் சுலோசளுவுக்குத் தன் ஞாபகமறதி புரிந்தது. தபால்காரன் கொடுத்துச் சென்ற கடிதங்களைப் புரட்டினுள். இரண்டு பத்திரிகை களும் ஒரே ஒரு கடிதமும் இருந்தன. கடிதத்தை மட்டும் விலாசத்தை உன்னிப்பாகக் கவனித்தாள். மறுகணம் அவளுக்கு ஏமாற்றமாகப் போய்விட்டது. அவள் எதிர் பார்த்துத் தவங்கிடக்கும் கடிதம் அது இல்லை என்று நினைத்து மனம் பொருமினுள். அவளுக்குப் பெருமூச்சு பிய்த்துக்கொண்டு வந்தது.