பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

165 ○。 விவிட்டி வைத்திருந்த வெள்ளைக் காகிதங்கள்: மை நிரப்பிய பே-ைஇரண்டும் கூடத்தில் விரித்த பாய் மீது அப்படியே இருந்தன. எதிரே பார்வைக்கு வசமாக இருந்தது ராகவனின் படம், அருகே பாங்க் கணக்கு. அத்துடன் அவள் கதாசிரியையுங்கூட. பூவுடன் சேர்ந்த நாரும் மணம் பெறும் என்பதுபோல கதாசிரியையான பாமாவுடன் பழகிய சுலோசனுவும் கதை எழுதுமளவுக்கு. அவளது ரசிகத் தன்மை உற்சாகப்படுத்திற்று. கதை கள் எழுதினுள், ஒயாமல் ஒழியாமல் எழுதினுள்: முயற்சி மெய்வருந்தக் கூலி தந்தது. கதைகள் பிரசுர. மாயின; பணம் தேடிவந்தது, தேவைக்கு மிஞ்சி. அன்ருடம் பிடிசோறு உண்ணக்கூட அவளுக்கு ஒடமாட் டாது. அப்பொதெல்லாம் அவளுக்குக் கணவனின் நினைவு தான் ரம்பமாக அறுத்து அவளே ரத்தச் சாருகப் பிழிந்: தெடுத்தது. அவரை அநியாயமாகத் துரத்திவிட் டேனே பாவி. எனக்கு இந்த ஜன்மத்திலா அதற்கு. விடிவு ஏற்படப் போகிறது? என் கணவரை இந்தப் பிறப்பில் கண்டுவிடுவேன? எனக்குக் கதைகள் எழுதும் கலே முன்பு ஏற்பட்டிருந்தால், அவரை வீட்டில் உட்கார்த்தி வைத்து, நான் நாளெல்லாம் உழைத்து எழுதிப் பணம் சேர்த்து அவருக்கு ராஜோபசாரம் நடத்து வேனே...! தெய்வமே, அவர் எங்கிருக்கிருரோ? இந்தச் சோதனைபோதாதா? இன்னமுமா என்ன வெந்து சாகப் பண்ணவேண்டும்?-பாங்க் புத்தகம் இருந்தது. அதில் சுலோசவிைன் பெயரில் இரண்டாயிரம் ரூபாய் பாங்கில் வரவு.இருந்ததைச் சொன்னது புத்தகம். அதைப் பார்த்த சுவட்டில், கீழே கசங்கிக் கிடந்த ராகவனின் முதலும் கடைசியுமான கடிதத்தைப் பார்த்தாள். அதையும் பார்த்த சடுதியுடன் ராகவனின் உருவம் அவள் கண் வளையத்தில் கருத்துப் பதிந்தது. அவளுக்குப் பெருமூச்சும்