பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/119

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.64. நான் எங்காகிலும் தொலைந்து உயிரை விட்டுவிடு கிறேன்' என்று அலறிஞள்; பொங்கி வெடித்த எரிமலை தீக்குழம்பைக் கக்குவதைப்போல அவள் வார்த்தைகளே வாரி வீசினுள், என்றுமே கோபத்தையே தன் மனைவி முகத்தில் தரிசித்திராத ராகவன் அப்படியே அசந்து விட்டான், அவளுடைய கோட வெறியைக் கண்டு. அன்று பூராவும் புருஷனும் மனைவியும் குலைப்பட்டினி! விடிந்ததும், சுலோசளு தன் புருஷனைக் காணவில்லை. அவளுக்கு உயிரே போய்விட்டது போன்ற உணர்வு எங்கும் பரவியது. அடுத்த பதினைந்தாம் நாள்தான் திக்கு திசையில்லாமல் ராகவனிடமிருந்து நாலு வரிக் கடிதம் மட்டும் வந்தது. கடிதத்தின் இறுதியில் இருந்த, கரம் பற்றிய மனைவிக்குக் குடிக்கக் கூழுக்குக்கூட வகை செய்ய முடியாத நான் இனி உயிருடன் இருந் தென்ன, இறந்தென்ன? வன்ற வரிகளில் அந்த இறந் தென்ன என்ற ஒரு சொல் அப்பொழுது அவளேத் தீயா கப் பொசுக்கியது. தினமும் அவள் கடிதமும் கையுமாக அம்பிகையின் படத்தண்டை ஒடிப் போய் கண்ணிரைக் காணிக்கை செலுத்தியவாறு, தாயே, என் கணவரை உயிருடன் என்னிடம் ஒப்படை. எனக்குத் தாலி பாக் கியம் அருள். வேறு பொன்னும் பொருளும் வேண் டாம். அன்று என் வறுமைப் பட்டினியில் அப்படி என் கண்வரைக் கோபித்ததற்கு இதுவரை நான் பட்ட வேதனையும் அடைந்த தண்டனையும் போதும், தாயே! என் கணவரை என்னிடம் சேர்ப்பித்துவிடு. கிடைக்கும் கூழில் நாங்கள் நாட்களை ஒட்டுகிருேம்; அவர் முகம் ஒன்றே என் பசியைப் போக்குமே...!’ என்று புலம்பி அழுவாள் சுலோச.ை - ஆல்ை அன்றுவரை அவளிடம் அவள் கணவனே அம்பிகை சேர்த்து வைக்கவில்லை...!