பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

176 "மிஸ் ரோகிணி, முடிவு செய்துவிட்டீர்களா?” பிரபாகரன் சுழல் நாற்காலியில் சுற்றிக்கொண்டிருந் தார்; மனம் சுழன்றது. இன்னும் முடிவு செய்யவில்லை...' மெத்தை நாற்காலியில் அமர்ந்திருந்த ரோகிணி சுழன்முள்; எண்ணங்கள் சுற்றின. டைரக்டரின் கைப்பிடியிலிருந்த சிகரெட் நழுவியது. நடிகையின் உள்ளம் கனல் கக்கியது, சிகரெட்டின் கனல் போன்று. 'போய் வருகிறேன், டைரக்டர் ஸ்ார்.' "நல்லது, ரோகிணி. சிரித்த ரோஜாவின் டின்னர் நினைவிருக்கிறதல்லவா? எதிர்பார்த்துக்கொண்டிருப் பேன்...” நினைவுக் காட்சி மறைந்தது; தன் நினைவு வந்தது. ரோகிணிக்கு. 'முடிவு: முடிவு என்ன சொல்வது? திரைப்பட உலகிலே தன்னை மின்னும் நட்சத்திரமாக்கப் பிரயத் தனப்பட்ட டைரக்டர் பிரபாகரனுக்கு என்ன முடிவு கூறுவது? அவர் காட்டிய அன்பிற்கு, எதிர்பார்த்திருக் கும் காதல் வாழ்வுக்கு, திட்டமிட்டிருக்கும் சுவர்க்க இன்பத்துக்கு மத்திய கேந்திரமாக, துணைக் கருவியாக, இதயத் துடிப்பாக அமைந்திருப்பது நான் ஒருத்தியே அல்லவா? நான் மறுத்தால், மாறினல், மாற்றிவிட்டால் அவர் நிலை, கதி, முடிவு என்னுகும்? முடிவு! ஆம்; அவ ருக்கு என்ன சொல்வது?’ - அந்த முடிவு: . . . . எந்த முடிவும் அவளுள் கருத்தரிக்கவில்லை. மனக் ண் முன் மலர்த்திருந்த அக் காட்சியில் அவள் இதயம் பறிபோனள். .. ... . . . . . . . . .