பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாழும் காதல் "துன்பம் நேர்கையில் யாழெடுத்துே இன்பம் சேர்க்கமாட்டாயா ?” ரேடியோவில் பூங்குயில் கீதம் இசை எழுப்பிக் கொண்டிருந்தது. இசையூற்று பிறப்பித்த இன்ப வெள்ளத்தில் மிதந்திருந்த ரோகிணி, விழி சிமிட்டும் நாழி தன்னையும் மறந்து, கடந்த சில நாளாக மனதை அலைபாயச் செய்த அந்தச் சம்பவத்தையும் மறந்து, பாட்டின் பரவசத்தில் உள்ளத்தைப் பதித்துவிட்டிருந் தாள். துன்பம் துளும்பி நின்ற அவள் நெஞ்சில் இன்பம் சேர்த்தது ரேடியோவின் யாழ் ஒலி. பாட்டு ஒய்ந்தது. அவள் சஞ்சலம் ஏடு துவங்கியது; அமைதி ஏடு புரண்டது. மாலை நடந்த சிசித்த ரோஜா படப்பிடிப்பின் கடைசிக் காட்சியை நினைவுபடுத்திப் பார்த்தாள் நடிகை மிஸ் ரோகிணி. அழகின் அச்சாணி மண்டப மாக, அலங்காரச் சோபிதத்துடன் தோன்றினுள் அவள் , புன்னகையும் புதுநிலவும் பிணையுங்கால் உருவாகும் அழகு மயக்கம் போல. ஷூட்டிங் முடிந்தது; வேஷத் தைக் கலைத்துக்கொண்டிருந்தாள். கார் புறப்பட த் தயாராக நின்றது. ஒய்வு அறையில் டைரக்டர் பிரபா கரனும் நடிகை ரோகிணியும் அமர்ந்தனர். மின்சார விசிறி காற்றை அள்ளி வீசியது. மின் ஒளி கண்ணேப் பறித்தது. - -