பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/141

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடல் முத்து "ஆத்தா பேரிலே ஆணையிட்டுச் சொல்லு கிறேன். அக்கரைச் சீமையிலேருந்து திரும்பியாந்த தும் உன்னைக் கட்டாயம் கண்ணுலம் கட்டிக்கிறேன், பவளக்கொடி.” - தூனுடன், துணுகப் பிணைந்து நின்ற பவளக் கொடியின் விம்மித் தணிந்த நெஞ்சில் அவ்வார்த்தை கள் எதிரொலித்தன. கடல் கடந்து செல்லும் மாலு மிக்குக் கலங்கரை விளக்கு உறுதுணையாக அமைவது போல, அன்று கடல் கடந்து சென்ற நடேசன் விடுத்துச் சென்ற ஆறுதல் மொழியை நேருக்கு நேர் நின்று நேற்றுச் சொன்ன மாதிரி அவள் உணரலாளுள். சாயங்காலம் இருக்கும். கடை அலுவல்களைச் சீர் செய்துவிட்டுப் பவளக்கொடி திரும்பினுள். அவள் காதுகளில் தன் தாய்மாமன் கண்டிச் சீமையிலிருந்து வந்திருக்கும் சேதி காற்றுவாக்கில் விழுந்தது. உடனே அவளுக்குத் தன் மச்சான் நடேசனின் நினைவும் கூடவே வந்தது. மாமனைக் கேட்டால் மச்சானைப்பற்றி ஏதாகி லும் தெரியுமே என்ற ஆவலில், ஆயா, மாமன் வந்திருக்குதாமே; தெரியுமில்லே!’ என்ருள் பவளக் கொடி. - . -