பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

187 "அப்படியா? நீ சொல்லத்தான் எனக்குத் தெரியுது. தம்பியை விசாரிச்சா உன் மச்சானைப்பத்தி ஏதுளுச்சும் தாக்கல் கிடைக்குமே என்று கூறியவாறு கிழவி செல்லி புறப்பட்டாள். பூங்கரங்களில் கன்னத்தைப் புதைத்த வண்ண மிருந்த பவளக்கொடியின் இதயத் தடாகத்திலே நீர் மட்டத்திடை தலைமறைவாக இருந்த எண்ண மலர்கள் கம்பீரமாகத் தலை தூக்கிச் சிரித்தன. அவளும் பூப் போலப் புன்னகை பூத்தாள். கடந்த நினைவுகளை மீண்டும் எண்ணிப் பார்ப்பதில் தான் எவ்வளவு இன்ப மிருக்கிறது: அறந்தாங்கி - பட்டுக்கோட்டை ரஸ்தாவில் அந்தச் சாயாக் கடை இருந்தது. டீ என்ருல் டீ. அப்படி இருக்கும். முன்பெல்லாம்-அதாவது பவளக்கொடி 'பெரியவள்" ஆவதற்கு முன்னர் அவளே நேரில் நின்று சாயா பரிமாறுவாள். வாடிக்கைக்காரர்களுடன் குழந்தை போல் விளையாடுவாள்; கிளிமாதிரிக் கிள்ளை மொழி யைப் பாங்காக உதிர்ப்பாள்; இளம் பூஞ்சிட்டுப்போன்று சிறகடித்துப் பறப்பாள். அவள் என்ருல் ஏனையோ ருக்கும் ஒர் அன்பு-மயக்கம்! அவள் மயக்க உரு! பவளக்கொடி அலைகடலில் சேகரிக்கப்பட்ட முத்து; ஒளிபரப்பி ஒய்யாரமாய்த் திரியும் கடல் முத்து. பவள வாய் திறந்தால் முத்துக்கள் நகைக்கும்; கண் திறந்தால் வண்டுகள் ரீங்காரமிடும்; கன்னக் குழிவில் ரோஜா சிரிக்கும். அவள் காட்டு ரோஜா! அவள் பக்குவமடைந்ததும் கடையில் மாற்றம் நிகழ்ந்தது. அவள் இப்போதெல்லாம் சாயா போட்டு நேரில் வியாபாரம் பண்ணுவது நின்றுவிட்டது. அதற்குப்