பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 பதில் அவள் உள்ளறையில் எல்லாம் தயாரித்து, ஒவ்: வொரு செட்டாக வெளியே நீட்டுவாள். ஒவ் வொன்றையும் நிதானமாக வாங்கி வியாபாரம் செய் வாள் அம்மா. - நடேசன் அடுத்த பத்தாவது மைலிலிருந்தவன் காளைப் பருவம்; வயதின் பெரும் பகுதியைப் பர்மா - ரங்கூனில் கழித்தவன். ஊரின் சுற்றுச் சூழ்நிலைப் பாகி அவனைப் பற்றவில்லை. அவன் பவளக்கொடியை முதலில் கண்டதுமே மனதை அவள் வசம் பறிகொடுத்துப் போனன். அவன் ஆணழகன், அவள் பெண் பதுமை; அழகும் அழகும் பின்னின. பூங்கொடிக்குத் தாவிப் படரக் கொழுகொம்பு கிடைத்துவிட்டால் அப்புறம் அதன் வளர்ச்சிக்குக் கேட்கவும் வேண்டுமா? இதே போன்றதொரு பொங்கல் திருநாளில் பவளக் கொடி - நடேசன் முதல் காதல் சந்திப்பு நிகழ்ந்தது. அந்த வட்டாரத்தில் வழுக்கல் மர வேடிக்கை பிர மாதம். வானளாவிய கம்பமொன்று பூமியில் நடப்பட் டிருக்கும். கம்பம் பூராவும் பசை வழிந்தோடும். விரல் பட்டால் 'சர்'ரென்று வழுக்கி விட்டுவிடும். கம்பத்தின் உச்சியில் சாயத் துண்டில் பத்து ரூபாய் முடிந்திருக்கும். பரிசைத் தட்டி, மார்தட்டிக் கொள்ள அனைவர் உள்ள மும் சுவரிலடித்த பந்தாக எழும்பும். பலர் பரிசைத் தட்டக் கனவு கண்டதுடன் சரி. கடைசியில் நடேசன் ஒருவனல்தான் சாயத் துண்டையும், பணத்தையும் கம்பத்தின் உச்சியிலிருந்து கொணர முடிந்தது. ஆளுல் கம்பத்தினூடே சார்ந்து இறங்குகையில் அவன் கால் பின்னிச் சறுக்கி விட்டது. தாடிகடீர் என்று பூமியில் சாய்ந்தான். . . . . . . . . . .