பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

189 சுய நினைவு வரப் பெற்றதும் நடேசன் துயில் நீத்து விழிகளே மலரத் திறந்தான். அவன் ஒரு பெண்ணின் கண்காணிப்பில் இருப்பதை அறிந்தான். உடம்பில் லேசாக வலியிருந்தது; பலத்த காயமில்லை. மச்சான், மச்சான்' என்று பன்னெடு நாள் பழகிய பாவனையில் ஆதரவு செய்த பவளக்கொடியைக் கண்டதும், நடேசன் மெய்மறந்தான்; உடம்பு வேதனையை மறந்தான். உலகமே ஒரு சொப்பன சொர்க்கமாகத் திகழ்ந்தது. அதில் அந்த நங்கை கனவுக் குமரியாக-மாய மோகினியெனத்தோற்றம் கொடுத் தாள். அழகின் அன்வயமன்ருே அவள்! ஆம்; அவள் அவனுள் உருமாறிள்ை. அப்படியே அவனும் அவளுள் இடம் பெற்றன். ஆக மறு மூன்று நாட்களும் நடேசன் அவள் வீட்டில் தங்கும்படி வாய்ப்பு அவர்களே ஒன்று கூட்டியது. - - - 'மச்சான் அன்னிக்குக் கம்பத்திலே ஒவ்வொரு அடியா முன்னே ஏறிக் கடைசியாய்ச் செயிச்சதைக் கண்டதும் எம்மா சந்தோசப் பட்டுப்பூட்டேன் தெரியுமா? ஆளு. அதே சுருக்கிலே நீங்க கீழே விழுவிங் கன்னு களுக்கூடக் காணல்லே. இது மட்டும் உயிரு தப் பிச்சது புண்ணியந்தான்- கூறின. பவளக்கொடியின் தேறுதல் அவனே ஆறுதல் படுத்தியது. இதெல்லாம் பழைய கதை. - - ‘'வேளக்கொடி, பவளக்கொடி- சுய நினைவு. பெற்ற பவளக்கொடி, அலறியடித்துக்கொண்டு வந்த தன் அன்னையைக் கண்டதும் என்னவோ ஏதோ வென்று பதைத்துவிட்டாள். - . . . ; -