பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 தங்கச்சி, ஒன் மச்சான் காட்டுக் காய்ச்சவிலே, செத்துப்போயி நாலேஞ்சு நாளாயிடுச்சாமே!” என்று ஒலமிட்டாள் செல்லி. "மச்சான் எப்போது வரும் என்று நாட்களே யுகங் களாகக் கழித்து வந்த பவளக்கொடி இந்த எதிர்பாராத இடியைக் கேட்டதும் மனமிடிந்தாள்: பித்துப் பிடித்த வள் கணக்கில் அலறிஞள். அடுத்த தருணம் அவளே ஆறுதல் படுத்த வந்த அவள் ஆயாவிடம் அவளுக்கு ஆத்திரம் பற்றி எரிந்தது. எரிச்சல் மூண்டது. தீயின்றிப் புகையா? - நடேசனைக் கல்யாணம் செய்துகொள்ளப் போகும் தீர்மானத்தை ஒரு நாள் பேச்சுவாக்கில் தன் தாயிடம் பளக்கொடி எடுத்துரைத்தாள். தங்கச்சி, நடேசனை நீ கட்டிக்கிறதுக்கு அட்டி வில்லை. ஆணு அதுகிட்டே பேருக்குக்கூட நாலு காசு பணம் கிடையாதாமே. நம்ப பலகாரக் கடை மிச்சத் திலே எப்படி மூணு வயிறு நிரப்ப ஏலும்? நீ ரோசனை செஞ்சுக்க, பவளம்.” - சொல்லாமல் சொல்லிய கிழவியின் பேச்சு நடே சனுக்கு எட்டியது. -

பவளக்கொடி, எண்ணி ஒரு வருசத்துக்குள்ளே எப்பாடு பட்டும் கையிலே நாலு பத்துச் சேர்ந்திடும். கொஞ்சம் பசையுடன் திரும்பி வந்து உன்னைக் கண்ணுலம் செய்துக்கிறேன். உன் நினைவு ஒண்ணு தான் எனக்குப் பணத்தைத் தரமுடியும் பவளக் கொடி-' - அவள் பவளவாய் திறந்து விடை ஈந்தாள். இச் சம்பவத்தை மீளவும் நினைவுகூர்ந்த அவள், பெற்றவளே நிந்தித்தாள். யார் யாரை நோவது? அம்பு எய்தவள்