பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

191 அக்கிழவி. அம்பை நோவதா? அவளைக் கோபிப்பதா? அவள் ஏங்கினுள். இங்ங் ைம் அதிர்ச்சி ஏற்படும் என்று அவள் எப்படி எதிர்பார்த்திருப்பாள். பாவம்? பின்னர் நிகழவிருக்கும் நியதியின் நீதியை முன்கூட்டியே அறியும் "அஷ்டசித்தி படைத்த மாமுனியா’ அவள்? & ஆம் ஜம் என்று சதங்கை ஒலி முன் அறிவிப்பு மொழிய வந்து நின்ற வில் வண்டியிலிருந்து மாசிமலை அம்பலம் இறங்குவதைக் கண்ட பவளக்கொடி உள்ளே சரேலென்று பாய்ந்தாள். - ஆயா, மாமா வந்திருக்காக” என்ற அளவில் பட படப்புடன் கூறியதைக் கேட்ட கிழவி செல்லி ஆச்சரி யம் பொங்கக் கையில் வெற்றிலைச் சம்புடத்துடன் வெளியே வந்தாள். 'வா, தம்பி, செளக்கியமா? ஏது இந்த வீடு தேடி அத்தி பூத்தாப்பிலே, ஊம்; முதலிலே வெத்திலே போடு தம்பி.’’ அம்பலம் வருகை கிழவியை மலைக்கச் செய்தது. அவன் சுற்று வட்டாரத்தில் பசையான ஆசாமி. கிழவி யுடன் கூடப் பிறந்தவன். பர்மா, மலேயா, கண்டி இதெல்லாம் அவனுக்குத் தண்ணிர் பட்ட பாடு. செல்லியும் மாசிமலையும் உடன் பிறப்பில் ஒட்டிக் கொண்டார்களே தவிர, இயற்கையில் அவர்கள் ஒட்ட வில்லை. சில மனத் தாங்கல்கள்! கடைசியில் செல்லியின் கணவன் இறந்த சடங்கில் ராசியான்ை அம்பலம். + 'அக்கா, ஒங்கிட்டே ஒரு சேதி கேட்கலாமின்னு வந்தேன். எம் பெண்சாதி செத்து வீடே வெறிச்சோடிக்