பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

198 தெரிந்ததெல்லாம் ஆலவட்டம் சுழன்றன. அந்தப் படத் தில் மூன்று உருவங்களிருந்தன. அம்பலம்-லீலாநடேசன். அந்த நாளில் எடுத்தது! நடேசா ஆமா-நீ என் மகன்!” என்று அலறிஞன் அம்பலம். நடந்த சம்பவங்களை எண்ணினன். நடேசனின் தாய் வீலா-பர்மாவில் அம்பலம் இருக் கையில் அவனது அன்பிற்குப் பாத்திரமானவள். ஆனல் திடீரென்று கிளம்பிய உள்நாட்டுக் கலகம் அவர்களைத் திசை வேருகப் பிரித்தது. மாசிமலை அந்தத் தாயையும் சேயையும் மறந்தான். காலம் மாற்றிவிட்டது அவனை. பின் மூண்ட பர்மா யுத்தத்தில் உயிர் தப்பிய அவர்கள் எப்படியோ காலத்தை ஒட்டினர்கள். நடேசனும் பெரியவனுன்ை. அதற்குள் அவன் அன்னையின் வாழ்வும் முடிந்தது. மரணப்படுக்கையில்தான் அவள் தன் மக னுக்கு ரகசியத்தை உணர்த்தினுள். இதை நடேசன் மனத்திலேயே புதைத்துவிட்டான். எதற்கும் ஒரு வரை .யறை உண்டல்லவா? தன் தாயை வஞ்சித்ததற்கு அம்பலத்திடம் பழி வாங்கத் துடித்தான் நடேசன். ஆனல்...? - மாசிமலை அம்பலத்துக்கு நடேசன் தன் மகன் என்று அதுவரை தெரியவே தெரியாது. அவன் தூண்டில் புழுவாகத் துடித்தான்; விம்மினன். சம்பவங்கள் எத் துணை விந்தையாக உருப்பெற்றுவிட்டன?

நடேசா.” - -

புத்துணர்வில் மகனை அழைத்தான் மாசிமலை அம்பலம். - கண்ணிரில் நீந்திய விழிகளே மேலுயர்த்தினன். நடேசன் சரேல்ென்று வெளியேறினன். அம்பலமும்,