பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அந்தி மயக்கம் . க. கனகசபை சுவரில் தொங்கிய அந்தக் காலண்டரையே இமை பூக்காமல் பார்த்துக் கொண்டி ருந்தான். நிகழ்காலத்துக்குப் பிரதிநிதித்வம் பேசிய அந் நாள் காட்டி, கழிந்த காலத்தையும் சுட்டாமல் இருக் குமா?-ஆகவே, அவன் தன்னையும் அறியாமல், கிழி பட்ட தேதித்தாள் அத்தனையும் கிழிபடாமல் அப்படியே பிசின் இட்டு தனது மனச்சுவரில் ஒட்டப்பட்டி ருந்ததை படிப்படியாகப் படிக்கத் தொடங்கி விட்டான். ஆதரிப்பாளர் இல்லாமல், கசிந்த கண்ணிருடன், கலங்கிய நெஞ்சுடன்-பசித்த வயிறுடன், ஆத்தங் குடியை-சொந்த ஊரைத் துறந்து சென்ற அந்த ஓர் இரவு அவன்வரை விடியாத இரவாகி, அதே விடியாத இரவு அவனுக்கு வாய்த்திட்ட ஒரு விடி பொழுதாகவும் ஆனது. இந்த ஆறு வருஷங்களிலே அவன் உழைத்த உழைப்பு பலன் காட்டிவிட்டது. வகைவகையான பாத்திரங்களை அடுக்கிச் சுமந்து ஊர் ஊராய்ச் சுற்றிய அந்தக் கஷ்டங்களுக்கெல்லாம் ஒரு பரிகாரம் கிடைத்து விட்டது. அவளுல் இந்தப் பெண் ணுடத்தை மறக்க முடியுமா, என்ன? முதலாளி!...” - குரல் கேட்கவே, கனகசபை கல்லாவை இழுத்தபடி முகப்புக்குத் திரும்பினன். மதியச்சூரியன் சூடிபிடித்த