பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87


ராமனுதனும் மாதவனும் ஒரு முகமாக சிதம் பரத்தை நோக்கினர்கள். அவர்களது முகங்களில் கேள்விக் குறி தொக்கி நின்றது. சிதம்பரத்தின் முக மண்டலம் எந்தப் பதிலையும் தெரிவிக்கக் காணுேமே! அவன் ஏனே தலையைக் கீழே தாழ்த்திக் கொண்டவாறு, தாம்பூலத் தட்டில் கிடந்த கிராம்பொன்றை எடுத்து உதட்டில் சுவைத்துக்கொண்டிருந்தான். 'சிதம்பரம், நீங்களும் தான் என் கல்யாணத்துக்கு உங்கள் மனைவி சகிதம், தம்பதி சமேதராக எழுந்தருள வேண்டுமென்று பிரார்த்திக்கிறேன்’ என்ருன் தியாக ராஜன். உரிமையுடன் அன்பில் பிறந்த பாந்தவ்யமும் அவன் குரலில் உறவாடின. 'மன்னியுங்கள், தியாகு. இந்த ஜன்மத்தில் உங்கள் ஆசை வேண்டுகோளே என்னுல் நிறைவேற்ற முடியாத தற்கு ரொம்பவும் வருந்துகிறேன். அது என்னுடைய மறந்த கனவாகிவிட்ட பழங்கதை...!’ - சிதம்பரத்தின் பேச்சில் அளவிட முடியாத ஆருத் துயர் இழைபாய்ந்திருந்தது. ஏன் இத்தனை ஏக்கம்? ஏன் இவ்வளவு விரக்தி மனப்பான்மை? காரணம்...? காரணம் என்ன? ஏன் அப்படி நீங்கள் கரம் பற்றிய உயிர்த் துணைவியை உதாசீனம் செய்து ஒதுக்கு கிறீர்கள்...?' என்ருன் தியாகராஜன் மறுபடியும் இடை மறித்து. - * . . . சிதம்பரத்தின் இதழ்களில் பசை பாய்ந்திருக்குமோ? ஏன் அவன் அப்படி வாய்மூடி மெளனியாகி விட்டான்? - - சிதம்பரம் பெண்ணின் வாழ்வு தன் கணவரின் இன்ப அரவணைப்பில், அன்புப் பராமரிப்பில் தான்.