பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

89


தொடங்குவது? என்னை உதாசீனம் செய்தவளின் முகத்தை மீண்டும் நான் திரும்பிப் பார்க்கவா? ஊஹாம் ஒரு கணம்கூட எண்ணவும் மனம் ஒப்பவில்லையே அவளேப்பற்றி, மன்னியுங்கள் நண்பரே!” கணவன் என்னும் கடமை மறந்து பேசிய சிதம்பரத் தின் வார்த்தைகளுக்கு மீளவும் ராமனதன் மறு மொழி சொல்லத் தொடங்கினன். திருமணம் வெறும் ஐந்து நிமிஷச் சடங்கில்லே, அதைப் புரிந்துகொள்ள ஒரு வாழ்க்கை போதாது, தெரியுமா? உங்கள் மனத்திலுள்ள குரோதத்தை-அசட்டுப் பிடிவாதத்தை அலக்காக மூட்டை கட்டி வைத்துவிட்டு, உங்கள் துணைவியை மறு வாழ்வு பெறச் செய்யுங்கள். அதுவே உங்கள் கடமை; அக்கினி சாட்சியாக அவளைக் கைபிடித்த தருணம் நீங்கள் செய்து கொடுத்த வாக்குறுதி? தவறு செய்வது மனித இயல்பு. அதை மன்னிப்பதுதானே தெய் வீகம்...!” விம்மி வந்த கண்ணிர் ராமனதனப் பேசவொட்டா மல் நாவடைக்கச் செய்து விட்டது. சிதம்பரம் ஒருகணம் அதிர்ச்சியுற்ருன். ராமளுத னின் கண்கள் சிந்தின நீர்மணிகள் அவனை அப்படிச் செய்தது. தன் விஷயத்தில் அவன் கொண்டுள்ள அன்பும் ஈடுபாடும் அவனைத் தன் நிலை மறக்கச் செய்தன. - "ராமனுதன், உங்கள் அன்பும் அக்கறையும் மகத் தானது. உங்களுக்கு நான் ரொம்பவும் கடமைப்பட் டிருக்கிறேன். ரேணுகாவை அழைத்து வரும்படி நாளைக்கே என் மாமருைக்குக் கடிதம் எழுதிவிடுகிறேன். சரிதானே...? என் கடமையை நினைவுபடுத்தி, உன்ரக் செய்ததற்கு மிக்க நன்றி...!" என்ருன் சிதம்பரம். குனிந்த தலை நிமிர்ந்து, முகத்தில் அன்றுவரை நிலவி தி.-6. - -