பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

91


முர்கள். மாலையில் சிதம்பரத்தின் புது வாழ்வுக்கு அடித்தளமிட்டுப் பிரிந்தவர்கள் தாம், அப்புறம் ஒரு வரையொருவர் சந்திக்க முடியவில்லை. ராமனுதனின் அறை திறந்தது திறந்தவாறு கிடந் தது. சாமான்களெல்லாம் போட்டது போட்டபடி சிதறிக் கிடந்தன மூலைக்கொன்ருக. இரவு போடப்பட்ட விளக்கு போலும், அதுகூட இன்னும் அணைக்கப்படாது எரிந்து கொண்டிருந்தது. சிகரெட் துண்டுகள் பல பல சிதறிக் கிடந்தன. அவர்கள் மூன்று பேரும் ஒருவரை யொருவர் மாறி மாறிப் பார்த்த வண்ணம் இருந்தார்கள்; பேசவில்லை. ராமனதன் அறையில் காணப்படாததும், அறையின் அலங்கோலமும் அவர்களுக்கு ஏதோ ஒரு புதிராகத்தான் பட்டது. "இதோ ஒரு போட்டோ இருக்கிறதே...” என்று சொல்லியவாறு கீழே கிடந்த புகைப் படத்தை எடுத்து நீட்டினன் தியாகராஜன். இது ராமனுதனின் மனைவியின் போட்டோ. முன்பு இவர்கள் திருமணப் படம் தினத்தாள் ஒன்றில் வெளி வந்தது நினைவிருக்கிறது...! என்ருன் சிதம்பரம்.

இங்கே பாருங்கள் எத்தனை கடிதங்கள்...' என்று சொல்லிய மாதவன் மூலைக் கொன்ருய் கிடந்த அத்தனை கடிதங்களையும் ஒன்று திரட்டினன். அவை ஒவ்வொன் றும் பிரியமுள்ள கணவரவர்களுக்கு என்று ஆரம்பித்து கடைசியில் தங்கள் அடியாள் மீன' என்று ஒரே வாச கமாக முடிந்திருந்தது.

மீன என்பது ராமனதனின் மனைவியாயிற்றே. ஒன்றும் புரியவில்லையே. எங்கே ஒரு கடிதத்தைப் படியுங் கள் பார்க்கலாம்.'