பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

复0& நொறுக்கிப் போட்டுப்புட்டாராம்; மேலெல்லாம் மஞ் சப்பத்துப் போட்டிருக்குதாம்! பாவம், என்ன கார .ணமோ, புரியலே!’ என்ருள் அவள். வேலப்பனுக்காகக் கு மர வே ல ன் அனுதாபப் பட்டான்; பாஞ்சாலிக்காக வருந்தினன். வேறு வழி...? நாட்கள் நழுவின. அப்பால், பாஞ்சாலியை எதிர் பாராத சந்தர்ப்பங்களிலே குமரவேலன் சந்தித்திருக் கிருன். ஆனல் அவளுடன் ஒரு வார்த்தைக்கூடப் பேசி .யதில்லை. பாவம், பாஞ்சாலி! தங்கமான பொண்ணு!...மச் சான் மச்சான்னு உசிரை விடுமே!...ஆன, கடைசியிலே எல்லாம் சொப்பனமாட்டம் முடிஞ்சிட்டுதே?...' என்று மனம் நொந்த சம்பவங்கள்கூட இன்று குமரவேலனுக்கு கனவு போலத்தான் தோன்றின. புளியமரத்துக் கிளை ஒன்றில் அவன் மோதிக் கொண்ட போதுதான், குமரவேலனுக்குத் தன் நினைவு பளிச்சிட்டது. நின்ருன்; நெற்றியில் விழுந்திருந்த கீற வினின்றும் வழிந்த குருதித் துளிகளை லேஞ்சி"யில்ை துடைத்தபடி நடந்து, அவ்வீட்டினுள் நுழையப் போன வன், சடக்கென்று பின்தங்கி விட்டான். உள்ளே நிலைப் படியில் நின்றவாறு பாஞ்சாலி தன் கணவனிடம் பேசிக் கொண்டிருந்தாள். குமரவேலன், அடைப்பைச் சுற்றிப் பின்பக்கம் வளைந்து வந்து ஒளிந்துகொண்டு சம்பாஷணையைக் கேட்டான். ஆமாங்க மச்சான்!...இப்பவே அந்தப் பசுவைக் கொண்டுபோய் பட்டியிலே அடைச்சுப்பிட்டு வந்திடுங்க! .அப்பத்தான் செவந்தி புருசனுக்கும் எல்லாம் நல்லாப்