பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 0 }. "பாஞ்சாலி!” என்று மெய்மறந்து கூவினன். அவன் கண்களில் கண்ணிர் இருந்தது. அழாதீங்க, மச்சான்!” பாஞ்சாலி ஆறுதல் கூறி முடிவதற்கும், அவ்விடத் தில் பாஞ்சாலியின் கணவன் ஏர்க்கலப்பையுடன் வந்து நிற்பதற்கும் கணக்காக இருந்தது. "இந்தாப் பாரு, குமரவேலா!...பாஞ்சாலி உனக்கு முந்திச் சொந்தக் காரியாயிருக்கலாம்; முறைக்காரப் பெண்ணுகவும் இருக்கலாம். ஆனால், அதெல்லாம் பழங் கதை. பாஞ்சாலி என் சம்சாரமாகி மாசம் மூணு ஆயிடுச்சு; அவளோடே தனியே நின்று பேசுறதுக்கு உனக்கு உரிமை கிடையாது; இவள் என் சொத்து!...' என்று வெறி பிடித்தமாதிரி வார்த்தைகளை அள்ளி வீசினுன் வேலப்பன். தூய உள்ளத்துடன் பேசிக் கொண் டி ரு ந் த. விவரத்தை விளக்கவேண்டுமென்றுதான் குமரவேலன் துடித்தான். ஆளுல், அதற்குள் வேலப்பன் தன் மனைவியிடம் நெருங்கி, ஏ. பாஞ்சாலி!...இன்னுெருவாட்டி இந்த ஆம்பளைகிட்டே நீ பேசினதாகச் சேதி காதுக்கு எட்டுச் சின்ன, அப்பவே என்னுேட கருக்கரிவாளுக்கு உன் தலை காணிக்கையாயிப் போயிடும்!” என்று எச்சரித்தான். அவள் தொடர்ந்தாள். நிழலும் நிழலும் அந்தி சந். திப்பொழுதில் அடியளந்து சென்றன. குமரவேலன் இல்லம் மிதித்தான். செவந்தி மணி விளக்கை ஏற்றியிருந்தாள். இராச் சோற்றை உண்ண எண்ணியபோது, செவந்தி தெரிவித்த தகவல் அவனைக் கண் கலங்கச் செய்தது. "மச்சான்!... உங்க மாமன் மகள் பாஞ்சாலியை அதோட வீட்டுக்காரர். அடிச்சு