பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

i00 கேட்க வந்தான் வேலப்பன். அவன் உள்ளுர்க்காரன்; ஆளுல் சேலம் ஜில்லாவில் கற்சட்டி வியாபாரத்தில் கனத்த பணத்துடன் வந்திருந்தான் அவன். பாஞ்சாலி யின் பெற்ருேருக்கும் இந்தச் சம்பந்தத்தில் ஆறுதல் கனிந்தது. குல தெய்வமும் சம்மதம் கொடுத்தது. குமரவேலனின் நெஞ்சில் கடந்த காலத்து இன்பக் கனவின் நிழல் அவ்வப்போது படர்ந்து அவனைத் துன்பப் படுத்தியது. இந்நிலை சில மாதங்களில் சீர்திருந்தியது. அவனைப் பெற்றவர்களின் விருப்பப்படி செவந்தியை அவன் கைத்தலம் பற்ற வேண்டியவன் ஆளுன் ஆம்: காமாட்சியம்மனும் சம்மதித்து விட்டாள்! ஒரு நாள். பாஞ்சாலி புதுமணம் பொலிவுற தலை யிலும் இடுப்பிலும் தண்ணிர்த் தவலை ஏந்திய வண்ணம் வீடு நோக்கிச் சென்று கொண்டிருந்தாள். அப்போது, குருவிகள் கூடு நாடித் திரும்பும் வேளே. குமரவேலன் குளத்து மேட்டில் போரடி முடிந்து காளைகளுடன் வந் துக்கொண்டிருக்கையில், பாஞ்சாலி அவனைக் கண்டதும் இமைபொழுது நின்முள். 'சொகமா பாஞ்சாலி?” ஆமாங்க!” ஒட்டியிருந்த உறவு முறை வெட்டபட்டதால்தான் அவளுடைய முகத் திரையில் நாணத்துக்குப் பதிலாகச் சஞ்சலம் கோடு கிறுக்கியதுபோலும்! - - -

செவந்தி நல்லாயிருக்காங்களா?”

"ஆமா பாஞ்சாவி' . X நான் போயிட்டு வரேனுங்க" என்ருள் அவள். குமரவேலன் எங்கோ சஞ்சரித்துக் கொண்டிருந் 3. . ான்.பாஞ்சாலியின் வார்த்தைகளே அவன் எற்கவில்லை.