பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

99


தொட்டுப் படர்ந்து வருகின்ற பண்பாடு ஆகும். பெண் எடுப்பவர் பெண் கொடுப்பவர் ஆகிய இருதரப்புகளிலே உள்ளுக்குள் எவ்விதமான ஏற்றத் தாழ்வு இருப்பினும், கல்யாண விஷயத்தில் அது செல்லுபடியாவதில்லை. குல தெய்வமான காமாட்சியம்மன் சந்நிதியிலே இருதரப் பினரும் சாமி கும்பிட்டு நிற்க, பூசாரி உடுக்கடித்துக் 'குறி சொல்வான். குறிக்கப்பட்ட மணமகனும் மண மகளும் புருஷன் பெண்சாதி யாக தெய்வத்தின் சம்ம தம் கிடைத்தால்தான், அவ்வீடுகளிலே கொட்டு மேளம் முழங்கும்; சம்பந்திச் சீர் வரிசை, உலும்பை, விருந்து முதலிய சம்பிரதாயங்கள் செயற்படும். பூசாரியின் வேத வாக்கு’க்கு மாருக அங்கு எதுவுமே நடக்காது; நடந்ததும் இல்லை. இப்படிப்பட்ட கிராமத்தின் நியதிப் பின்னணியில் தான் குமரவேலனும் பாஞ்சாலியும் அன்பு பாராட்டி. வந்தார்கள்; காதல் பரிவர்த்தனைக்குக் கட்டுப்பட்டும் வந் தார்கள். காமாட்சி அம்மன் தேரடியும்,பூசாரி ஊருணி யும் குளமங்கலம் சாலையில் சர்க்கார் வைத்திருந்த ஆல மரங்களும், அத்திமரத்துத் திண்ணைப் பள்ளிக்கூடமும் அவர்களுடைய கனவுகளை வளர்த்தன. வாழ வைத்தன; சாட்சியாகவும் அமைந்தன. - ஆனல், குமரவேலன்-பாஞ்சாலி இல் வாழ்க்கையில் இணைய முடியவில்லை; அவர்களின் திட்டத்துக்குத் தெய் வம் அனுசரணை சொல்லவில்லை. அவர்களது கனவை ஒரு நொடியில் பொடியாக்கி விட்டார் பூசாரி. இவங்க ரெண்டு பேரும் கண்ணுலம் கட்டிக்கிட ஏலாது! ஆத்தா ஒத்துக்கிடல்லே!’ என்று முத்தாய்ப்பு வைத்துவிட்டார் அந்தப் பூசாரி. - அழுது புலம்பின நாட்களினூடே திரும்புமுனைப் பகுதிகளும் ஏற்படாமல் இல்லை; பாஞ்சாலியைப் பெண்