பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98


'என்னேட சொந்த மாமன் பொண்ணு அப்ப்டிச் சொல்லியிருக்கும்?...காதுச் சேதியை மனசிலே வாங்கு கிறதுக்கே எனக்கு ஒடலையே?...' காமாட்சி அம்மன் கோயில் வந்தது. குமரவேலன் சிரம் தாழ்த்திக் கரம் குவித்தான். நீர் ததும்பிய நேத்திரங்களைக் கூர்மைப் படுத்தி, எதிர்ப் புறமாகத் திரும்பிவிட்டத் தருணத்திலே, சிதம்பரத் தேவர் தோட்டமும், ஜில்லா போர்டு கிணற்றடியும், நெடித் துயர்ந்த வேப்பமரமும் பிரிந்து சேர்ந்து விலகத். தொடங்கின. பாஞ்சாலி”...! அவனேயும் மீறிய வகையில் அவள் மணக்கண்ணில் உருவெடுத்துத் தலை காட்டினுள். கொண்ட நேசமும் பூண்ட அன்பும் பண்டு நிகழ்ந்த செயல்கள் என்பதைக் கூருமல் கூறினவோ? குமரவேலனுக்குப் பாஞ்சாலி மாமன் மகள் வேண் டும். முறைமைப் பெண் அவள்; அவள் பால் அவன் கொள்ளை அன்பு வைத்திருந்தான்! கணக்கன் விடுதிக் கிராமத்தில் இருந்த இளவட்டங்கள் பாஞ்சாலியின் எழிலிலே ஒற்றைக் கண் பதித்திருந்த சமயத்தில் வீட் டுக்கு மூத்தவர்கள், ஏலே பொடிசு!... பாஞ்சாலி நம்ப மேலக்குச்சு குமரவேலனுக்கின்னு பொறந்தவள்டா... கொள்வினை கொடுப்பினைக்குக் கட்டுப்பட்ட குடும்பங். களுக்குள்ளே நீ போய் எசகு பிசகாத் தலையை நீட்டிப் பிடாதேப்பா!...' என்பார்கள். ஆம் ரத்தத்தொடர்பு ஆரம்பித்து வைத்ததிருமண முறைமை அது. உரிமைப் பெண்ணை மணம் புரிந்து. கொள்ளும் முதல் பாத்தியதை முறைக்காரனுக்குத்தான் உரியது. இவ்வழக்கம் அந்தக் குடியிருப்பில் தொன்றுத்