பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாழம்பூச் சித்தாடை நீல நிறப்பட்டுத் துணியில் வாரி இறைக்கப்பட் டிருந்த முல்லை அரும்புகள் எப்படி விண்ணுக்குச் சென் றன? மண்ணில் விளையாட்டுக் காட்டிக் கொண்டிருந்த பந்து ஆகாயத்துக்கு ஏன் தாவியது? மண்ணும்விண்ணும் காட்டிக்கொண்டிருந்த அந்த சித்திர விசித்திர விளை -யாட்டைப் பற்றிய தீராத சிந்தனையில்தான்.அவனுடைய மனத்தின் மனம் ஈடுபட்டிருந்ததா? நிலவு காட்டிச் சென்ற தடத்தைப் பின்பற்றி நடந்து கொண்டிருந்தான் குமரவேலன். பறிபோன இதய அமைதி விலகி நின்று அவனைக் கைத் தட்டிக் கூப்பிட்டுக் கேலி செய்வதுபோல ஒர் உணர்வு அவனுள் பரவியது. ஆமாங்க மச்சான் உங்களோடே சொந்த மாமன் மகள் பாஞ்சாலியேதான் அப்பிடிச் சொல்லிச் சுது!’ என்று தன்னுடைய மனையாட்டி எடுத்துரைத்த செய்தி அவன் காதுகளிலே ரீங்காரமிட்டுக் கொண்டிருந் தது; பித்து பிடித்துவிட்ட மாதிரி இருந்தது அவனுக்கு. வெறி கொண்டாற்போன்று கால்களை எடுத்துப் போட்டு நடந்தான். நெருஞ்சி முள் தைத்தது. மீண்ட சுய நினைவு வலியை உணர்ந்தது. அவன் நின்ருன்; நின்ற ஒற்றையடிப் பாதையில் முள் தங்கியது. குமர வேலனின் கருத்து கீழ்த் தெருவில் இருந்தது. ஆகவே அவன் நடந்தான். - -