பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அஞ்சலி தெய்வத்துக்குப் புதிர் சொந்தம், அதுபோலவே சமு. தாயத்துக்குப் பிரச்னை சொந்தம். அந்தப் புதிரும் இந்தப் பிரச்னையும் இல்லையென்ருல் அதாவது, இவ்விரு சக்திகளும் சங்கமம் ஆகவில்லையென்ருல் அப்பால் வாழ்க்கைக்கு மகிமை உண்டாவது இல்லை. இத்தகையதொரு மகிமைக்கு அடி நாதமாக இயங்கு வது, அல்லது, இயக்கப்படுவது இலக்கியம். இலக்கியம் என்பது சமுதாயத்தின் ஆன்மா. ஆன்மா, தானே இயங்க வேண்டும். இது இயல்பு; நியதி. ஆகவே, இலக்கியமும் தானே இயங்க வேண்டும். இது மரபு. ஆனால், இலக்கியம், இப்பொழுது இயக்கப்படுகிறது. இந்தச் சில ஆண்டுகளாகத் தொற்றிக் கொண்ட நோய் இது. நோயைத் தீர்ப்பதற்கு டாக்டர்கள் இருக்கிரு.ர்கள். இவர்களுக்கு வைத்தியம் செய்த அனுபவமும் அடைந்த வெற்றியின் பங்கும் என் நெஞ்சின் நினைவிலும் என்றென்றும் பசுமையுடன் விளங்கும். இது உண்மை. உண்மையின் பிரதிநிதிகள் நீங்கள். அறிவீர்களே!. அதல்ைதான், இலக்கியத்துக்கு வரம்பறுக்கும் பொழுது, இயக்கப் படுவது என்னும் புறம்பானதொரு பதச் சேர்க்கை யையும் இணைத்தேன். - - - - தானே இயங்க வேண்டிய இலக்கியம், இப்போது இயக்கப்பட்டு வருகிறதென்ருல், அந்தத் துர்பாக்கியத் துக்குக் காரணம் ஆனவர்கள்-காரணம் ஆகின்றவர்கள் ஒரு சில் இலக்கியப் புல்லுருவிகள்தாம்! இவர்கள் எண்ணிக் கையில் குறைவு; செய்கிற-செய்து வருகிற ஆர்ப்பாட்டங்கள் இவர்களைப் பற்றித்தான் உங்கட்குத் தெரியுமே!’ எழுத்தைப் பிழைப்பாகக் கொண்டவர்கள் இவர்கள். ஆகவே