பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

127


குழந்தை என்ன என்ன அட்காசம் செய்யப்போகிருளோ என்ற பதற்றத்துடன் மீளுவும் பின் தொடர்ந்து குழந் தைக்கு 144 போட்டாள். ஆனல், கணவரின் அறைக் குள் நுழைந்த அவள் அங்கே கண்ட காட்சி அவளைத் திகைக்கச் செய்துவிட்ட்து. தனக்கு வாங்கித் தந்த மாதிரியில் அதே நைலான் பட்டும், அதே இள நீல நிற ஆர்கண்டி வாயில் ஜம்பரும் அங்கே கிடந்தன. அவற்றி லெல்லாம் சாரதா என்ற பெயர் அச்சடித்தாற். போன்று எழுதப்பட்டிருந்தது. ‘சாரதா என்பது இவருடைய முதல் மனைவி அல் லவா? இறந்த அவள் பெயரை இந்தப் புதுத் துணிகளில் எழுதியிருக்கிருரே! எல்லாம் புதிர்ச் சுழலாக இருக் கிறதே...!" என்று மனம் மறுகினுள் மீன; அவள் மூளை மரத்தது; வலி கண்டது. மறு கணம் அங்கே கிடந்த ஒரு போட்டோவையும் பார்வையிட்டாள். குழந்தையுடன் ஒர் அழகிய மங்கை முறுவல் கோலத்துடன், யெளவனப் பூரிப்புடன் காணப் பட்டாள். குழந்தையை அடையாளமா தெரியாது அவளுக்கு? அதுதான் இந்த ராதை அந்த யுவதி ராதை யின் அம்மா, தன் கணவரின் முதல் தாரம் சாரதா என்பதை உணர்ந்துகொள்ளச் சில விநாடிகள் கூடப் பிடிக்கவில்லை மீளுவுக்கு. சுரந்து வந்து முட்டி மோதி நின்ற கண்ணிர்ப் பெருக்குக்குக்கூட அணை போடத் தெம்பிழந்தவளாக, மீளு கீழே இறைந்து கிடந்த சாமான்களை ஆழ்ந்து நோக்கினுள். மருந்துச் சீட்டுகளும், காலியான இஞ் செக்ஷன் டப்பாக்களும் கிடந்தன. ஐயப்பாடு அவளுள் எழாமல் இருக்குமா? திரை மறைவில் ஏதோ நாடகம் நடக்கிறதென்பதை உறுதிப்படுத்திக் கொண்டாள்.