பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126


தலை, உள் ஹாலை அடைந்தார். இங்கிலீஷ் பாட்டு ஒன்று காற்றில் அலேபாய்ந்து வந்தது. இதமாக இருந் தது. அதற்குள் டெலிபோன் அழைப்பு ஒன்று"ஸ்டுடி யோவிலிருந்து வந்தது. பதறியடித்துக் கொண்டு புறப் பட்டார் டைரெக்டர். பாண்டியாக் கார் பறந்தது! 4. க் லம் ஒரு செப்பிடு வித்தைக்காரன். விநாடிகள் நிமிஷங்களாகவும், நிமிஷங்கள் மணிகளாகவும் மாறும் கண்கட்டு வித்தை அவன் ஒருவனுக்கே அத்துப்படி: ஏக போக உரிமையுங்கூடத்தான். இல்லையென்ருல் கடிகாரம் அதற்குள் இரவு மணி பத்து என்று சொல் லுமா, என்ன? மீனு அப்படித்தான் நினைத்தாள். அவள் மனம் அடித்துக் கொண்டது. இன்னும் அவள் கணவர் ஸ்டுடி யோவைவிட்டு, வீடு திரும்பாதது கண்டு அவள் கலக்கம் வளர எத்தனித்தது. தாமதம் என்ருலோ, காரியாலயப் பையன் மூலம் செய்தியை வீட்டுக்கு அனுப்பிவிடுபவ. தாயிற்றே! முதலில் கணவரை எதிர்பார்த்தாள்; பின் பையனை எதிர்பார்த்தாள். கடைசிவரை யாரும் வர வில்லை. குழந்தை வீரிட்டு அலறியது. கிளாக்ஸோ’ புகட் டினுள்; குழந்தை சிரித்தது, கிளாக்ஸோ' பாப்பா மாதிரி. மீளு சிரித்துக் கொண்டாள். 'அம்மா...அம்மா’ என்று அபிநயம் பிடித்த வண்ணம் குழந்தை, தன் தந்தையின் தனி அறைக்குள் குறுநடை பயின்று ஓடியது. கணவரின் அறைக்குள்ளே