பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 டானே!...... எங்கெல்லாம் தேடியும் அவனைக் காண வாய்க்கலையே! அவன் மட்டும் என் கையிலே வசமாச் சிக்கிறதுக்கு சாமி உதவிச்சின்ன, செத்தான் அப்பவே!... ஊம்!...” என்று வெறித்தனத்துடன் தன்னுள் கறுவிக் கொண்டிருந்தான் கோவிந்தன். புதுப் பணக்காரப் புள்ளியான சன்னசியைக் கோவிந்தன் இரண்டோர் இடங்களில் பார்த்திருக்கிருன். சன்னசிக்குக் கோவிந்தன் பூவாயியின் காதலன் என்பது தெரியாது. و و و "கொஞ்சம் துருக பண்ணுங்க படுத்தின்ை புது ஆசாமி. 'ஆகட்டும்-ஆமா, அண்ணுச்சிக்கு சொந்த மண்ணு எது?’ என்று கேட்டு வைத்தான் கோவிந்தன். கத்தி ஓடியது புது ஆசாமியின் முகத்திலே. 5 § என்று அவசரப் "எல்லாம் இந்தப் பக்கம்தான்... தாடியை மழிக்க மழிக்க, கோவிந்தன் பிரமித்தான். ஷேவ் செய்துகொள்ள வந்தவனின் அசல் முகம் இப்போதல்லவா கொஞ்சம் கொஞ்சமாய் வெளிப் படுகிறது. 'ஆ' என்று பற்களைக் கடித்துக் கொண்டான் கோவிந்தன். ஓர் அரைக் கணம் அவன் முன் அவனி சுழன்றது. பதற்றமும் தடுமாற்றமும் கூடின. அவன் பார்வை சன்னசியின் கழுத்தை குறி பார்த்துக் கொண் டிருந்தது. எங்கெல்லாம் இந்த அயோக்கியனைத் தேடிளுேம், தானகவே வந்துவிட்டான் உயிரைக் கொடுக்க. - ஆத்திரத்தின் வெறியுடன் கைக் கத்தியைத் திசை திருப்பினன், கோவிந்தன். -