பக்கம்:திருமதி சிற்றம்பலம்.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

143 மறுகணம் அம்மாடி’ என்று ஒலம் பரப்பினுன் சன்னசி. 'ஆ கோவிந்தன் தன் நினைவு பெற்றுக் கூர்ந்து பார்த்தான். சன்னசியின் இடது கன்னத்தில் ரத்தம் பீரிட்டது. ஏதோ அங்கே புண் இருந்திருக்கிறது. அதில் கத்தி பட்டவுடனே துடித்துவிட்டான் சன்னசி. கோவிந்தனின் நெஞ்சு வலித்தது. மனச்சாட்சியின் கத்திமுனைக்கு இலக்கானுல் வலிக்காதா பின்னே? 'உங்களுக்கு வேறு எங்கேயோ ஞாபகம் போல!’ என்று வருந்தினுன் சன்னசி. கன்னத்தின் வலி பேச்சில் குரல் தந்தது. . 'ஊஹல்ம், அதெல்லாம் இல்லீங்க. இப்ப சரி பாகிட்டேனுங்க! உங்க வலியும் இனிச் சரியாகிடுமுங்க, அண்ணுச்சி!” என்று காயத்தைத் துடைத்து ஸ்னே பூசிஞன் கோவிந்தன். வேலை முடிந்துவிட்டது. "எவ்வளவு தரனும்?' "முக்கால் ரூபா. எழுபத்தஞ்சு காசு!’ இம்பிட்டுத்தானு?’’ நான் பிறத்தியார் சொத்துக்கு ஆசைப்படுகிற ஜென்மம் இல்லீங்க... அப்படிப்பட்ட ஈன ரத்தத்துக்கு நான் பொறக்கலிங்க' நேர்மையின் வைராக்கியம் பேசியது கோவிந்தனின் குரலில். சில்லறையைச் சரிபார்த்துக் கல்லாவில் போட் டான் கோவிந்தன், -