பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

84

திருமந்திரம்


அமர்ந்த இடம் என்புழிப் பெயரெச்சத்து அகரம் தொக்கது செய்யுள் விகாரம். இறைவன், வழிபடுவார் சென்னியின் உச்சியில் எழுந்தருளி வழிபாட்டினை யேற்றுக்கொள்ளுதலே, ‘எமது உச்சியாரே’ என ஞான சம்பந்தரும் ‘மனத்தகத் தான் தலைமேலான்’ என நாவுக்கரசரும் ‘துரிய மாமலர்ச் சேவடிக்கணஞ் சென்னி மன்னிச் சுடருமே’ என வாதவூரடிகளும் அருளிய மறைமொழிகளாலுணரலாம். கொல்லாமை பற்றிக் கூறவந்தவர் இயைபுபற்றி அகப் பூசைக்குரிய ஏனை அங்கங்களையும் உடன் கூறினார்.

45. கொலையே களவுகட் காமம் பொய்கூறல்
மலைவான பாதக மாமவை நீக்கித்
தலையாஞ் சிவனடி சார்ந்தின்பஞ் சார்ந்தோர்க்
கிலையாமிவை ஞானா னந்தத் திருத்தலே. (200)

ஐம்பெரும் பாவங்களின் நீங்கினோர் அவற்றாலுளவாந் துன்பங்களினீங்கிச் சிவானந்தப் பெருவாழ்வு பெறுவர் என அறிவுறுத்துகின்றது.

(இ-ள்) கொலையும் களவும் கள்ளும் காமமும் பொய்கூறலும் ஆகிய இவை ஐந்தும் அஞ்சி நடுங்கத்தக்க பெரும் பாதகங்கள் ஆகும். அவற்றை நீக்கி எல்லாவற்றுக்கும் மேலாகிய சிவபெருமான் திருவடியை உள்ளத்தாற் சார்ந்து வழிபட்டோர்க்கு இவற்றால் வரும் துன்பங்கள் இல்லை. இறைவனது ஞானமாகிய சிவானந்தத்துள் திளைத்திருத்தலாகிய பேரின்பம் உளதாகும் எ - று.

கொலேயே என்புழி ஏகாரம் எண்ணுப் பொருளில் வந்தது. மலைவான பாதகம்-விளைவுகண்டு உயிர்கள் நடுக்கமுறுதற்குரிய பெருங் குற்றங்கள். தலையாம்-மேலான,