பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

திருமந்திரம்


எனவரும் திருக்குறட் பொதுவிதியை அடியொற்றி எழுந்த சிறப்பு விதியாகும். ‘தன்னாட்டு நிகழுந் தீமைகளை நாடோறும் ஆராய்ந்து அதற்கு ஒக்க முறைமையைச் செய்யாத அரசன் நாள்தோறும் நாட்டினை யிழக்கும்’ என்பது இத் திருக்குறளின் பொருளாகும். இழத்தல்-பயனெய்தாமை.

இனி, ‘நாட்டில் அவநெறி நாடொறும் நாடித்தவநெறி நாடானேல்’

என்ற பாடத்திற்கு ‘தனது நாட்டில் அவநெறியாகிய தீய நெறிகளையே நாடித் தவநெறியினை நாடாதொழிவானானால்’ எனப் பொருள் கொள்ளுதல் பொருத்தமுடையதாகும். நாடு - நாட்டில் வாழும் உயிர்கள். கெடுதல் - உயி ரும் உடைமையும் இழந்து வாழ்வின் பயனை இழத்தல். மூடம் - அறியாமை குன்றுதல் - தேய்ந்து இல்லையாதல்.


53. வேடநெறி நில்லார் வேடம்பூண் டென்பயன்
வேட நெறிநிற்போர் வேடம்மெய் வேடமே
வேட நெறிநில்லார் தம்மை விறல்வேந்தன்
வேட நெறிசெய்தால் வீடது வாகுமே. (240)

தவவேடத்தாரைத் தவநெறியில் நிலைக்கச் செய்தல் நாடாளும் வேந்தனது கடமை என்கின்றது.

(இ - ள்) தாம் மேற்கொண்டுள்ள தவவேடத்திற்கு ஏற்ப (மெய்ம்மையான தவவொழுக்கத்தில் நிலைபெற்று) ஒழுகும் ஆற்றலில்லாதார் அத்தவவேடத்தினைப் புறத்தே மேற்கொண்டமையால் யாது பயன்? தாம் மேற்கொண்ட வேடத்திற்கு ஏற்பத் தவநெறியில் நிலைபெற்றொழுகுவோரது தவக்கோலமே மெய்ம்மையான தவத்தினைப் புலப்படுத்தும் வேடமாகும். தாம் மேற்கொண்ட தவ வேடத்திற்கு ஏற்ப அந்நெறியில் நிலைபெற்றொழுகும் ஆற்றல்