பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

103


'காக்கை கரைந்துண்ணும் காலம் அறிமினே? என்ருர் . 'காக்கை கரவா கரைந்துண்ணும் ஆக்கமும், அன்ன நீரார்க்கேயுள என வரும் தமிழ்மறைப் பொருள் இதன் ஈற்றடியில் இடம்பெற்றுள்ளமை காண்க .

‘விடகிலேன் அடிநாயேன் வேண்டியக்கால் யாதொன்றும் இடகிலேன் அமணர்கள் தம் அறவுரை கேட் டலமந்தேன்? எனவும்

கொடையிலேன் கொள்வதே நான் எனவும் வரும் அப்பர் அருள் மொழிகள் இங்குக் கருதத்தக்கன.

அறஞ்செய்வான் திறம்

59. யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலே யாவர்க்குமாம் பசுவுக்கொரு வாயுறை யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே. (252)

யாவரும் அன்ருட வாழ்க்கையில் எளிதில் மேற்கொள்ளு

தற்குரிய அறங்களாவன இவையென்றுணர்த்துகின்றது .

(இ - ள்) இறைவனுக்கு ஒரு பச்சிலேயிட்டு வழிபடுதல் என்பது யாவர்க்கும் உரிய எளிய செயலேயாம். பசுவுக்கு ஒருவாய்ப் புல்லேப் பறித்தளித்தல் எல்லோர்க்கும் இயல் வதேயாம். தாம் உண்ணுங் காலத்தில் ஒரு கைப்பிடி உணவைப் பிறர்க்குக் கொடுத்தல் எல்லார்க்கும் எளிய அறமேயாகும். பிறருக்கு (ப்பொருளே வழங்க முடியாவிட் டாலும்) இனிய மொழிகளைப் பேசுதல் எளிய நல்லறமே யாகும். எ-று.

யாவர்க்கும் - செல்வர் வறியோர் என்னும் வேறுபாடு இன்றி எத்திற மக்களுக்கும். ஆம் - இயலக்கூடியதாகும்.