பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

Í 04 திருமந்திரம்

உறக்கம் நீங்கியெழுந்தவுடன் தெய்வ வழிபாடும் பசுக் காத்தலும் உண்ணும்போது ஒரு கைப்பிடி உணவினைப் பிறர்க்குக் கொடுத்து உண்ணுதலும் யாவரிடத்தும் இன் னுரைகளைப் பகர்தலும் செல்வர் வறியவர் என்னும் வேறு பாடின்றி எல்லோராலும் நாள்தோறும் வழுவாது செய்தற் குரிய எளிய நல்லறங்களாம்.

'அகனமர்ந் தீதலின் நன்றே முகனமர்ந்

தின்சொல ளுகப் பெறின் ?? என்பதனை நி இன வு ப டு த் து ம் முறையில் அமைந்தது யாவர்க்குமாம் பிறர்க்கின்னுரை தானே? எனவரும் இறுதி அடியாகும்.

'நொச்சியாயினுங் கரந்தையாயினும்

பச்சிலையிட்டுப் பரவும்தொண்டர் கருவிடைப்புகாமற் காத்தருள்புரியுந் திருவிடைமருத என்ருர் பட்டினத்தடிகளும். தெய்வ வழிபாடு, உயிரிரக் கம், உணவளித்தல், இன் சொற் கூறல் என்பன எளிய அறங்களேயாதலின் ஒல்லும் வகையான் அறவினை ஒவாதே செல்லும் வாயெல்லாம் செயல்’ என வற்புறுத்து வாராயினர்.

60. திளேக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி

இளேப்பினை நீக்கும் இருவழியுண்டு கிளேக்குந் தனக்குமக் கேடில் புகழோன் விளேக்குந் தவம் அறம் -

மேற்றுணையாமே. (258)

பிறவித் துன்பங்களைப் போக்குதற்குத் தவமும் அறமுமே துணேயாம் என்கின்றது.