பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/128

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள் முறைத் திரட்டு 1 | 1

தாலும் (கடுந் தவங்களேச் செய்தாலும்) அன்பினுல் நெஞ்சம் நெகிழ்ந்து உருகிக் குழையும் இயல்புடையார்க் கல்லாமல் (அன்பரல்லாத பிறரெவராலும்) என்னுடைய மனமணியாகத் திகழும் இறைவனே அடைய முடியாது

ότ - Ω .

என்பே விறகா இறைச்சியறுத்திட்டு? என்ற தல்ை காமியப் பயன் கருதிச் செய்யுங் கடுந் தவத்தினையும் "பொன்போற் கனலிற் பொரிய வறுப்பினும் என்றத ஞல் அத்தகைய பயன் கருதிச் செய்யும் வேள்வியை யும் ஒருங்கு குறித்துள்ளமை கூர்ந்து ணரத் தகுவதா கும். காமியப் பயன்களேக் கருதிச் செய்யப்படும் வேள்வி முதலாயினவற்ருல் வரும் இன்பம் முன்னர்ப் பசித்து உண்டு பின்னும் பசிப்பானுக்கு அவ்வுணவினல் வரும் இன்பத்தையொத்து நிலையிலதாதலின், இவை மெய்ப் பொருளையுணர்தற்குரிய ஞானத்தைத் தருவன அல்ல என்பதும், இறைவனே மறவாத பேரன்பினுற் செய்யப்படும் சரியை கிரியா யோகங்களாகிய அன்புநெறியே இறைவனே உள்ளவாறுணர்ந்து அடைதற்குரிய மெய்ந்நெறியாம் என் பதும் விளங்க,

  • அன் போடுருகி யகங்குழைவார்க் கன்றி

என் பொன் மணியினை எய்தவொண் ணுதே?

என்ருர். அன்புரிமை தோன்ற என் பொன்மணி என்ருர். ‘என் பொல்லா மணியே என்பது திருவாசகம். ஞான மீசன் பாலன்பே என்றனர் ஞானமுண்டார் என வரும் சேக்கிழார் வாய்மொழியும் இங்குச் சிந்திக்கத் தகுவ தாகும்.

64. ஆர்வமுடையவர் காண்பர் அரன் தன்னே ஈரமுடையவர் காண் பார் இணே யடி பாரமுடையவர் காண் பார் பவந்தன்னேக் கோர நெறிகொடு கொங்கு புக்காரே (273)