பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

125


இடையிலேயே. புறப்படுதல் - வெளிச்செல்ல முயலுதல். முந்தியபூசை - தக்கல்ை முற்படச் செய்யத் தகுந்த வழிபாடாகிய உபசாரம். முடிதல்-நிறைவேறப்பெறுதல். முறை-வரிசை மதிப்பு. சிந்துதல்-சிதறுதல். சிந்தித் திசைதிசையே தேவர்களே யோட்டுகந்த செந்தார்ப் பொழில்புடைசூழ் தென்னன் பெருந்துறையான் என் பது திருவாசகம். சின ஞ்செய்தல்-வெகுளுதல். அண்ணல் என்றது வீரபத்திரராய் வந்த இறைவனே .

சக்கரம் பெற்ற திருமால் தக்கன் வேள்வியில் தன் கையிலுள்ள சக்கரத்தை வீரபத்திரர் மேல் விட அவர் அணிந்துள்ள வெண்டலே மாலையில் உள்ள தலையொன்று அதனேக் கவ்விக் கொள்ளப் பின் திருமால் இறைவனே அருச்சித்து மீண்டும் அதனைப் பெற்றுக் கொண்டதனைக் கூறுவது சக்கரப்பேறு என்ற பகுதியாகும். மாலும் பிரம லும் தாம்தாம் முதற்கடவுள் என்று தம்முள் மாறுபட்டு நிற்பத் தமக்குமுன் ஆரழலாய்த் தோன்றிய பரம்பொரு ளின் அடிமுடிதேடி யறியாது இளைத்து நின்ற நிலையில் இறைவன் அவர்களுக்கு அருள் செய்த செய்தியைக் கூறுவது அடிமுடி தேடல்’ என்ற பகுதியாகும். படைப் புக்கு முதற்காரணமான எலும்பினையுங் கபாலத்தினேயும் இறைவன் தன் மேனியில் அணிந்துள்ள திறம் பேசுவது எலும்புங் கபாலமும் என்ற பாடலாகும்.

இறைவன் உயிர்கள் உய்திபெறுதற்பொருட்டுச் செய் தருளும் படைத்தல் காத்தல் அழித்தல் மறைத்தல் அரு ளல் என்னும் ஐந் தொழில்களேச் செய்தருள்கின்ருன். அம்முதல்வன் செய்யும் ஐந்தொழில்களுட் படுவன் உயிர் கள் எடுத்துள்ள உடம்பும் கருவி கரணங்களும் உலகும் நுகர்பொருளுமாகும்.