பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

167


(இ - ள்) திருவருளாகிய அன்னேயை மதித்து வழிபட்டுப் பயன் பெருத தேவர்களும் இல்லை. அன்னை யின் துணையின்றி அரிதின் முயன்று நிறைவேற்று தற்குரிய தவம் ஒன்றுமில்லை. அருளின் துணையின்றி உலகத்தலைவர் ஐவராற் செய்து முடித்தற்குரிய செயல் எதுவும் இல்லே. அன்னேயின் துணையாகிய அருட்பதி வின்றி உயிர் வீட்டுலகினை யடைதற்குதவும் பிறிதொரு சாதனம் இருப்பதாக யான் அறிந்திலேன் எ-று.

அவள் என்றது, அவனுகிய சிவைெடு பிரிவின்றியுள்ள பராசத்தியைக் குறித்த சொல். அறிதல்-மதித்து வழிபட்டுப் பயன் பெறுதல். அவளன்றி-அருளாகிய துணையின்றி. உயிர்கள் செய்தற்குரிய அரிய தவங்கட்கெல்லாம் தோன் ருத் துணேயாய் உடனிருந்து ஊக்கமளிப்பது திருவருளே. திருவருள் உடனிருந்து ஊக்கம் விளைவிக்காத நிலையிற் செய்யப்படும் எத்தவமும் நிறைவேருது என்பார் அவளன் ருச் செய்யும் அருந்தவம் இல்லே’ என்ருர். ஐவர்-உலகினேப் படைத்துக் காத்து அழித்து மறைத்து அருளுதல் ஆகிய ஐந்தொழில்களேச் செய்யும் அயன், மால், உருத்திரன், மகேசன், சதாசிவன் என்னும் ஐம்பெருங் கடவுளர். ஜம் பொறிகள் என்பாருமுளர். சிவனருளாகிய துனேயின்றி ஐவரும் தத்தம் தொழிலேச் செய்து முடிக்கும் ஆற்ற லுடையர் அல்லர் என்பார் அவளன்றி ஐவரால் ஆவ தொன்றில்லே? என்றர். ஊர்புகுதல்-சிவமாநகராகிய வீடு பேற்றினையடைதல். திருவருளின் உறுதுணையின்றி உயிர் கள் சிவகதியினைப் பெறுதல் இயலாதென்பதனை அருளின் வழிநின்று சிவப்பேறெய்திய யான் எனது அநுபவத்தின் வழி எளிதின் உணர்ந்து கொண்டேன் என்பார், அவ ளன்றி ஊர்புகும் ஆறு அறியேனே என்ருர் . ஆறு-வழி, சாதனம் அறிதல் என்றது, ஈண்டு அழுந்தி யறிதலாகிய அநுபவ வறிவினைச் சுட்டி நின்றது.