பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அருள்முறைத் திரட்டு

219


ஒடுங்குதலாவது புறத்தே உலகப் பொருளிற் செல்லாது அகத்தே உள்முகமாக மடங்குதல். நிலேபெறுதல்-ஞேயத் தில் அழுந்திப் பதிதல், உத்தமர்-பெரியோர். நடுங்குதல்நிலே துளங்கி வருந்துதல் நமன்-இயமன். இடும்பைதுன்பம். இராப் பகல் என்பது மறப்பு நினைப்பு என்னும் அறிவு மயக்கத்தைக் குறித்தது. பற்றுவிட்டோர்க்குப்படும் பயனில்லே என இயையும். படுதல். இனிமேல் உளதாதல். பெரும் பயனுகிய பரம்பொருளே இம்மையே அடையப் பெற்ருர்க்கு இனிமேல் அடையவேண்டிய பயன் எதுவும் இல்லே எனவே அன்னுேர் ஒன்ருலுங் குறைவுடையாரல்லர் எனக் குறித்தவாரும். சுரும்பமருங் குழல் மடவார் கடைக் கணுேக்கிற் றுளங்காத சிந்தையராய்த் துறந்தோருள்ளப் பெரும்பயனே எனவும் வானந் துளங்கிலென்: மண்பா தலம்புக்கு நாமார்க்கும் குடியல்லோம் ? எனவும் என்று நாம் யாவர்க்கும் இடைவோ மல்லோம் : எனவும் வரும் அப்பர் அருளுரைகள் இத்திருப்பாட்டின் விளக்கங்களாகும்.

'மும்மையாயிரவர் தாங்கள் போற்றிட முதல் வளுரை

இம்மையே பெற்று வாழ்வார் இனிப்பெறும்

பேருென்றில்லார் ? என்பது பெரியபுராணம்.

அருளுடைமையின் ஞானம் வருதல்

இறைவன் திருவருளாலேயே உயிர்கட்கு ஞானமுண் டாம் என்னும் உண்மையை யுணர்த்தும் பகுதி.

148. பிரானரு ளுண்டெனில் உண்டுநற் செல்வம் பிரான ரு ளுண்டெனில் உண்டுநன் ஞானம் பிரானருளிற் பெருந் தன்மையும் உண்டு பிரானருளிற் பெருந் தெய்வமு மாமே. (1645)