பக்கம்:திருமந்திர அருள்முறைத் திரட்டு.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238 திருமந்திரம்

வெளியில் எழுந்தருளிய இறைவனது வியாபகத்தன்மை . பூ-நெஞ்சத் தாமரை. பொற்கொடி-இறைவன் அருட் சத்தியுடன் தோற்றும் ஒளியுருவம்; சுடர்விட்டுளன் எங்கள் சோதி என்பது ஆளுடைய பிள்ளையார் அருளிச் செயல் .

  • அண்டமா யாதியா யருமறையோ டைம்பூதப்

பிண்டமா யுலகுக்கோர் பெப்பொருளாம் பிஞ்ஞகனைத்

தொண்டர்தாம் மலர்தூவிச் சொன்மாலை புனைகின்ற இண்டைசேர் சடையானே என் மனத்தே வைத்தேனே' என்பது திருநாவுக்கரசர் தேவாரம்.

  • அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட

அங்ங்ணே பெரிய நீ2 என்பது திருவிசைப்பா,

158. போது புனேகழல் பூமிய தாவது

மாது புனே முடி வானக மாவது நீதியுள் ஈசன் உடல் விசும்பாய் நிற்கும் ஆதி யுறநின்ற தப்பரி சாமே. (1724)

அண்டமே இலிங்க வடிவாதலே உணர்த்துன்றது.

(இ-ள்) அடியார்கள் அருச்சித்த நறுமலர்களேப் புனேந்த இறைவன் திருவடி கீழுள்ள நிலவுலகமாகத் திகழ் வது. கங்கையைப்புனைந்த இறைவனது சடைமுடிவானுல காக விரிந்துவிளங்குவது, நீதியுள் நிலைபெற்ற இறைவனது திருவுடம்பு புறத்தே விரிந்து பரவியுள்ள ஆகாயமாக விளங்குவது. உலக முதல்வகிைய இறைவன் அண்ட முழுதுமாய் விரிந்து பொருந்திநின்ற நிலே அத்தன்மை

பதாம் எ-று.